வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அவசரமாய் டப்பிங்கை முடித்த விஜய். வரவிருக்கும் புதிய அப்டேட்.

தளபதி விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் தற்போது டப்பிங் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கான டப்பிங்கை நடிகர் விஜய் வெறும் இரண்டு நாளிலேயே முடித்துக் கொடுத்துள்ளார். விஜய் இரண்டு நாளில் டப்பிங் முடித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வேகமாக அவர் ஏன் டப்பிங் பேசி முடித்தார் என்ற பல கேள்விகளும் எழுந்து வருகிறது.

நடிகர் விஜய் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக குடும்பத்துடன் லண்டனுக்கு செல்ல இருக்கிறார். அதன் காரணமாகவே அவர் படத்துக்கு அவசரமாக டப்பிங் பேசி முடித்துள்ளார். சினிமாவில் ஒரு சின்ன இடைவெளி கிடைத்தாலும் நடிகர் விஜய் உடனே லண்டனுக்கு பறந்து விடுவார்.

அந்த வரிசையில் விஜய் தற்போது இந்த வருட புத்தாண்டை லண்டனில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். இதனால் பீஸ்ட் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று இப்பட சம்பந்தமான ஒரு முக்கிய அப்டேட் ஒன்று வெளிவர இருக்கிறது.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பாடலை வரும் புத்தாண்டு தினத்தன்று வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. மேலும் இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. வரும் புத்தாண்டு தினத்தை பீஸ்ட் பட பாடலுடன் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

Trending News