ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆசை ஆசையாய் வாங்கிய காரை விற்கும் விஜய்.. சின்ன கீறல் கூட இல்லாமல் இருக்கும் காரின் விலை என்ன தெரியுமா.?

Vijay: விஜய்க்கு புதுசு புதுசாக லேட்டஸ்ட் மாடல் கார்கள் வாங்குவது என்றால் அவ்வளவு பிடிக்கும். இவரிடம் பிஎம்டபிள்யூ, மினி கூப்பர், இன்னோவா, ஆடி, டொயோட்டா என ரக ரகமான கார்கள் இருக்கின்றன. இதன் விலை மட்டுமே பல கோடிகளைத் தாண்டும்.

ஆனாலும் அவரிடம் இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் அவருக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன ஒன்று. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த கார் ஆரம்பத்திலேயே அவருக்கு பஞ்சாயத்தை தான் கொண்டு வந்தது.

vijay
vijay

அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஒரு லட்சம் அபராதம் விதித்தார். இப்படி சர்ச்சையை கிளப்பிய அந்த கார் தான் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

vijay-car
vijay-car

இந்தக் காரை மட்டும் தானே ஓட்டும் விஜய் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நெல்சன் உட்பட அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கார் தற்போது எம்பயர் ஆட்டோஸ் என்னும் டீலர்ஷிப்பில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

விற்பனைக்கு வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்

அந்த வலைதள பக்கத்தில் விஜயின் கார் அனைத்து கோணங்களிலும் படம்பிடிக்கப்பட்டு முழு விவரங்களுடன் செய்தியாக வெளியாகி இருக்கிறது. 10 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அந்த காரில் சிறு கீறல் கூட கிடையாது.

புத்தம் புதுசு போல் இருக்கும் அந்தக் கார் சர்வீஸ் செய்யப்பட்டு நன்றாக ஓடும் கண்டிஷனில் இருக்கிறது. இதன் ஓடோமீட்டர் ரீடிங் 22,000 கிலோமீட்டர். காரின் அனைத்து எலக்ட்ரானிக் அம்சங்களும் பக்காவாக இருக்கிறது.

அதன்படி இந்த காரின் விலை 2.6 கோடி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விலை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளப்படும். 2012ல் விஜய் இந்த காரை வாங்கும் போது இதன் விலை 3.5 கோடி ஆகும். இப்படியாக விஜய் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த காரை தற்போது விற்பனைக்கு விட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்ட விற்பனை தொகையை தாண்டி எக்ஸ்ட்ராவாக பணம் செலுத்த தேவையில்லை எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி வைரலாகி வரும் நிலையில் விஜய்யின் காரை யார் வாங்க போகிறார்கள் என்பதும் சர்ப்ரைசாக உள்ளது.

ஃபேவரைட் காரை விற்பனை செய்யும் விஜய்

Trending News