TVK: தமிழக வெற்றி கலகம் பற்றி இன்று தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. கடந்த வருடம் இதே நாள் அரசியலுக்கு வரப்போவதையும் கட்சியின் பெயரையும் அறிவித்தார் விஜய்.
ஒரு வருடத்திற்குள் தமிழகத்தில் அதிக எதிர்பார்க்கப்படும் அரசியல் கட்சி தலைவராகிவிட்டார் என்பது நிதர்சனமான உண்மை.
முதல் மாநாடாக இருக்கட்டும், பரந்தூர் சென்றதாக இருக்கட்டும், சமீபத்தில் வெளியிட்ட கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களின் லிஸ்ட் ஆக இருக்கட்டும் வியக்க வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
தலைவர்களின் சிலையை நிறுவிய விஜய்
தமிழக அரசியல் கட்சியின் பெரிய வியூகங்களை வகுத்த இரண்டு பேரும் புள்ளிகளுடன் விஜய் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இன்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு தன்னுடைய கடிதத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
இரண்டாம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நம்முடைய இலக்கு என்பதையும், தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகம் கிழக்கு திசையாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் ஐந்து அரசியல் தலைவர்களின் சிலையை நிறுவி இருக்கிறார்.
வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் தான் அது. தமிழகத்தில் இருக்கும் முக்கிய கட்சிகளின் மூத்த தலைவர்களின் சிலையை நிறுவி பெரும்புள்ளிகளை திக்கு முக்காட வைத்து விட்டார் விஜய்.