வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 68 அப்டேட்: 300 கோடியில் பான் இந்தியா மூவி.. இயக்குனரை உறுதி செய்த விஜய்

தளபதி விஜய் இப்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி விட்டது.

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தன்னுடைய 67 வது படத்தில் இணைய இருக்கிறார். தளபதி 67 ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் வாரிசு பட வேலைகள் முடிந்தவுடன் தளபதி 67 க்கான அப்டேட் வெளியிடப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: தளபதி விஜய்யை தரக்குறைவாக பேசிய நடிகர்.. பதிலடி கொடுத்த மெர்சல் பட வில்லன்!

விஜய்க்கு அடுத்தடுத்து இயக்குனர்கள் கதை சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றனர். சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாக பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் விஜய்க்காக ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கொண்டிருப்பதாக கூறினார்.

தற்போது தளபதி 68க்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தன்னுடைய 68 வது படத்தில் இயக்குனர் அட்லீயுடன் இணைகிறார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் இயக்க இருக்கின்றது. தளபதி-68 படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா மூவியாக எடுக்க உள்ளனர்.

Also Read: எம்ஜிஆர், சிவாஜியை ஃபாலோ செய்த விஜய், அஜித்.. இரு தலைமுறைக்கும் இருக்கும் ஒற்றுமை

நடிகர் விஜய் ஏற்கனவே அட்லீயுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இந்த மூன்று படங்களுமே விஜய்க்கு பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. மேலும் விஜய்-அட்லீ கூட்டணி எப்போதுமே விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் கூட்டணி ஆகும்.

இயக்குனர் அட்லீ பிகில் படத்திற்கு பிறகு பாலிவுட் கிங் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கிறார். மேலும் தளபதி விஜய் இந்த படத்தில் கேமியோ ரோலில் வருகிறார்.

Also Read: அன்பு தம்பிக்காக எல்லாத்தையும் மறந்த விஜய்.. காற்றில் பறக்கும் கொள்கைகள்

Trending News