சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. அதிலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றமே உள்ளது. ஒரு இந்திய நடிகருக்கு அதுவும் தமிழ் நடிகருக்கு வெளிநாட்டில் ரசிகர் மன்றம் இருப்பது ரஜினிக்கு மட்டுமே.
1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படம் முதன்முறையாக ஜப்பானில் ரிலீஸ் ஆனது. ஜப்பானில் முதன்முதலில் ரிலீசான தமிழ் திரைப்படம் முத்து தான். அன்றிலிருந்து அண்ணாத்தே திரைப்படம் வரை ரஜினியின் எல்லா படங்களும் ஜப்பானில் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது.
Also Read: தளபதிக்கு பயத்தை காட்டிய துணிவு படத்தின் வியாபாரம்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் அஜித்
சமீபத்தில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம், கைதி டில்லி என்னும் பெயரில் ரிலீஸ் ஆனது. எனினும் ரஜினியின் படங்கள் அளவுக்கு மற்ற படங்களுக்கு ரெஸ்பான்ஸ் ஜப்பானில் கிடைத்ததில்லை.
இப்படி ரஜினியின் கோட்டையாக இருக்கும் ஜப்பானில், விஜய் நுழைய இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் சென்செய் (Sensei) என்னும் பெயரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜப்பானிய மொழியில் சென்செய் (Sensei) என்றால் வாத்தி என்று பொருள்.
Also Read: வந்தா மலை போனா மசுரு.. வாரிசை ஒரு கை பார்க்க, துணிவுடன் ரிலீஸ் தேதியை லாக் செய்த உதயநிதி
ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்படும் இந்த படம் வரும் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. கைதியை தொடர்ந்து மாஸ்டர் ஜப்பான் மொழியில் ரிலீஸ் ஆகும் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம் ஆகும். இந்த படம் தமிழில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

கோலிவுட்டில் ரஜினிக்கு அடுத்து நல்ல சினிமா மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது விஜய் தான். விஜய்க்கு கேரளாவில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது இவருடைய படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜப்பானில் ரஜினி அளவுக்கு விஜய்க்கு வரவேற்பு இருக்குமா என இனி தான் தெரியும்.
Also Read: தளபதி விஜய்யை தரக்குறைவாக பேசிய நடிகர்.. பதிலடி கொடுத்த மெர்சல் பட வில்லன்!