சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்குவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களும் அவர்கள் வளர்ந்து வரும் சமயத்தில் பல நடிகைகளுடன் ஒன்றாக இணைத்து பேசப்பட்டனர்.
அந்த வரிசையில் ரஜினி, கமல், அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களும் அடங்குவர். அதே போன்று ரசிகர்களின் தளபதியாக இருக்கும் நடிகர் விஜய்யும் அப்படி ஒரு கிசுகிசுவில் சிக்கி இருந்தார். அதாவது விஜய் அவரின் திருமணத்திற்குப் பிறகு ஒருசில தோல்வி திரைப்படங்களை கொடுத்து பல சறுக்கல்களை சந்தித்து சமயம் அது.
அப்போது அவர் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடித்த கில்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அந்தத் திரைப்படத்தில் அவர்கள் இருவருக்குமிடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.
அந்த சமயத்தில் அவர்கள் இருவரை பற்றிய கிசுகிசுக்கள் மீடியாவில் அதிகமாக வெளியானது. இது விஜய்யின் மனைவி சங்கீதாவின் கவனத்திற்கும் சென்றது. இதனால் விஜய்யின் குடும்பத்தில் பல பிரச்சனைகளும் கிளம்பியது. அதன்பிறகு சங்கீதா தன் கணவர் விஜய்க்கு சினிமாவில் நடிப்பதற்கு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்.
அதாவது நடிகை திரிஷாவுடன் இனி இணைந்து நடிக்க கூடாது என்றும் ஹீரோயின் யார் என்பதை நான்தான் தீர்மானிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்து இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகிறார்.
அதன்பிறகு இதுவரை எந்த நடிகையுடனும் தளபதி விஜய்யை இணைத்து கிசுகிசுக்கள் மீடியாவில் வந்ததே கிடையாது. இதற்கு முக்கிய காரணம் அவரது மனைவி சங்கீதா மட்டும்தான். இப்பொழுது வரை அவர் தன் கணவர் விஜய் எந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து வருகிறார்.