திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

3 இடங்களை டார்கெட் செய்யும் விஜய்.. ராஜதந்திரியாக அரசியலுக்குப் தளபதி போடும் அஸ்திவாரம்

Actor Vijay Political Entry: மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகம் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். நடப்பது என்னவோ அதற்கு நேர் மாறாக தான் இருக்கிறது.

இந்நிலையில் சென்ற தேர்தலில் சைக்கிளின் மூலம் ஓட்டு போட சென்று நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் பிரவேசத்திற்கு தொடக்க புள்ளி வைத்தார். “இருக்கு ஆனா இல்ல! இல்லை ஆனால் இருக்கு” என்பது போல் விஜய் தனது அரசியல் பற்றி வெளிப்படையாக கூறாவிட்டாலும் தொகுதிவாரியாக பல திட்ட பணிகள் மேற்கொண்டு 2026 இல் அரசியலில் நுழையலாம் என்பது போன்ற கணிப்பை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றார்.

சமீப காலமாக விஜய்யின் நடவடிக்கைகள் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்கிறது. தனக்கு முன்னோடியான விஜயகாந்தை பின்பற்றி ரசிகர் மன்றத்தின் வாயிலாக நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்து அதை தொகுதி வாரியாக செயல்படுத்தி வருகிறார்.

Also Read: மீண்டும் விஜய் மானத்தை வாங்கிய மக்கள் இயக்கம்.. அதிரடியாக கைது செய்யப்பட்ட செயலாளர்

இதன் தொடக்கமாக சென்ற ஜூன் மாதத்தில் 10 மற்றும் 12 வகுப்பு  அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கொடுத்ததோடு அரசியல்  கருத்துக்களையும் முன்வைத்து பேசியிருந்தார். வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்பதை தன் படத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்கள் இடையே அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். “அம்பேத்கர் காமராஜர் பெரியார் ஆகியோரை படியுங்கள்” என்று மினி அரசியல்வாதியாகவே பேசினார் விஜய்.

பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு அடிக்கடி விசிட் செய்து  விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.அவர்களுடன் பேசும்போது தொகுதிவாரி என குறிப்பிடுவதில் இருந்து அவரது அரசியல் பிரவேசம் நிச்சயம். மேலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் நலப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து வருகிறார்.

சென்னை நீலாங்கரையில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்ததை தொடர்ந்து கோயம்புத்தூரில் மாணவர்களுக்கு இலவச நூலகத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார். இவரின் அடுத்த இலக்கு திருச்சியை முற்றுகையிட்டுள்ளது. திருச்சியில் பெருசா ஏதாவது பிளான் பண்ணனும்னு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

“சோறு போட்டு படிக்க வைத்த காமராஜரையே தோற்கடித்த உலகமடா இது”. விஜய்யும் தன்னால் இயன்ற அளவுக்கு அரசியல் சதுரங்கத்தில் காய்களை கவனமாக நகர்த்தி வருகிறார்.இவரின் ராஜதந்திரங்கள் பலிக்குமா என்பதை 2026 தேர்தலின் வாயிலாக காண்போம் .

Also Read: பல நூறு கோடிக்கு அந்த சேனலை வாங்கும் விஜய்.. அரசியல் ஆடுபுலி ஆட்டம்னா இப்படி தான் இருக்கணும்

Trending News