தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா இந்தியாவில் பெரிய புரட்சியை செய்யும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் இவர்களுக்குள் சண்டையை மூட்டி விட்டு இவர்களை எதிரிகள் போல காமித்து லாபம் அடைய நினைக்கிறார்கள் சிலர்.
குறிப்பாக இதனை சினிமாவில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். சினிமா நடிகர்களுக்குள் சண்டையை மூட்டி விடுவது சினிமா ரசிகர்களுக்குள் இடையே சண்டையை மூட்டி விடுவது. நீ பெருசா நான் பெருசா எனவும், எந்த படம் நன்றாக ஓடியது, வசூல் செய்தது என்று பிரச்சினையை கிளப்பி விடுவது என சிலர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இது அரசியல் நோக்கமாக கூட இருக்கலாம் தென்னிந்தியாவில் சில தேசிய கட்சிகள் ஆக்கிரமிப்பு பண்ண முடியவில்லை. அதனால் என்னவோ சினிமாவை வைத்து இவர்களுக்குள் சண்டையை கிளப்பி விட்டு வருகிறார்கள்.
இதனை நம் மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது விஜய் அஜித் சண்டையை விட விஜய் மகேஷ்பாபு, அஜித் பிரபாஸ், என இவர்களுக்குள் ரசிகர்கள் சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
ரீமேக் செய்யப்பட்ட சில படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றிருக்கும் தமிழில் தோல்வி பெற்று இருக்கும். தமிழில் வெற்றி பெரும் படங்கள் தெலுங்கில் தோல்வி பெற்று இருக்கும். ஆனால் இதை எல்லாம் வைத்து அரசியல் செய்து குழப்பத்தை உருவாக்க புதிதாக கிளம்பி இருக்கிறார்கள்.
தற்பொழுது உள்ள கோலிவுட் நிலைமையில் அஜித் சற்று சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்குவதால் தற்பொழுது மொத்தமாகவே சினிமாவை விட்டு போகப் போகிறார்.
ஆனால் விஜய் ஆரம்பிக்கப் போகும் அரசியல் கட்சி பலருக்கு பிரச்சினையை உருவாக்கும். அதனால் கட்சி ஆரம்பித்த உடனே ஒரு பீதியை கிளப்பி விட்டால் சரியாகும் என நினைக்கிறார்கள் சில அரசியல் கட்சிகள்.
இப்படி இருக்கும் நிலையில் இவர்களை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது? அரசியல் செய்வது? என இத்தனை நாட்கள் லாபம் பார்த்த சிலர் தற்பொழுது புதிதாக பிரச்சனையை கிளப்பிக் கொண்டு வருகிறார்கள். இதனைப் புரிந்து கொண்டு நம் மக்கள் இருந்தால் இந்தியாவில் தென் இந்தியா தான் பெஸ்ட் என சொல்லப்படும்.