புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தெருக்கோடியிலிருந்து கோபுரத்திற்கு வந்த விஜய் சேதுபதியின் அசர வைக்கும் சொத்தின் மதிப்பு!

Actor Vijay Sethupathi Net worth: மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைக்கு முழுமுதல் உதாரணமாக திகழ்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. குமரன் முதல் கிழவன் வரை எந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் கச்சிதமாக பொருந்தி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் பட்டாளமோ ஏராளம்.

தென்மேற்கு பருவக்காற்றில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் ஏற்ற இறக்கங்களுடன் படிப்படியாக முன்னேறி கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது. சில நூறுகளில் தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை இன்று இரண்டிலக்க கோடிகளுக்கு குறையாமல் உள்ளது.

நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன், காமெடியன் என அனைத்திலும் கட்டம் கட்டும் விஜய் சேதுபதி, நட்புடன் வந்து இந்த படத்தில் பெஸ்ட் அப்பியரன்சில் நடிக்க வேண்டும் என்று கேட்டாலும் உடனே ஓகே சொல்லி விடுவாராம். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவர் படத்திற்கு 13 கோடி முதல் 21 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்.

Also read: சர்ச்சைக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி.. வேப்பிலை அடிச்சு தூக்கி போட்ட மக்கள் செல்வன்

வளர்ந்து வரும் பல ஹீரோக்களுக்கு முன் உதாரணமாக திகழும் விஜய் சேதுபதி இயல்பிலேயே ஒரு கார் பிரியராம். ஸ்போட்ஸ் கார்களின் மீது அலாதி அன்பு கொண்ட விஜய் சேதுபதி பல லட்சம் மதிப்பு கொண்ட சொகுசு கார்களான பிஎம்டபிள்யூ, மினி கூப்பர், டொயோட்டா, இன்னோவா, பார்ச்சூன் என அத்தனை விலை உயர்ந்த கம்பெனிகளின் கார்களையும் அடுக்கி வைத்துள்ளாராம். நட்புக்காக எதையும் செய்யத் துணியும் விஜய் சேதுபதி ஒருமுறை தான் ஆசையாக வாங்கிய காரை தனது நண்பனின் கார் ஆக்சிடென்ட் ஆனதை அடுத்து அவரைத் தேற்றும் பொருட்டு கிப்டாக கொடுத்தாராம்.

திரையை தவிர்த்து  விளம்பர படங்களில்  மற்றும் பிராண்ட் அம்பாசிடராக தோன்றுவதற்கு 50 லட்சம் என பிக்ஸ் பண்ணி வைத்திருக்கிறாராம் கிடைச்ச பால் அனைத்திலும் சிக்சர் தான். ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட விஜய் சேதுபதிக்கு வட சென்னையில்  50 கோடி மதிப்பில் சொகுசு பங்களா உள்ளது. மேலும் கீழ்பாக்கம், எண்ணூர் போன்ற இடங்களிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வீடு மற்றும் இடங்கள் உள்ளதாக தகவல். திரையில் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்து தனக்கு நிகர் தானே என்று நிரூபித்து வரும் விஜய் சேதுபதியின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 140 கோடி முதல் 175 கோடி வரை உள்ளதாக தகவல்

சமீபத்தில் தனது 46வது பிறந்த நாளை கொண்டாடிய விஜய் சேதுபதி தனது 50 ஆவது படமான மகாராஜாவின் அட்டகாசமான போஸ்டரை பிறந்த நாளன்று வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். தொடரட்டும் விஜய் சேதுபதியின் வெற்றி பயணம்.

Also read: கடைசியா விஜய் சேதுபதி நம்பி இருக்கும் படம்.. ஹீரோவா நடிச்சு ஹிட் கொடுத்து அஞ்சு வருஷம் ஆச்சு

Trending News