Jason Sanjay: நடிகர் விஜய் மகன் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. அறிவிப்பு வெளியானதுமே படத்தை சூட்டோடு சூடாக ஆரம்பித்து இருந்தால் பல வதந்திகளுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.
ஆனால் இதுவரைக்கும் லைக்கா மற்றும் ஜேசன் சஞ்சய் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. அப்பா விஜய் சினிமாவில் இருந்து விலகும் முடிவெடுத்து இருக்கும் நேரத்தில், மகன் சினிமாவில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.
அதுவும் அப்பாவை போல் ஹீரோவாக இல்லாமல் தாத்தாவைப் போல் இயக்குனராக. அப்பா மற்றும் தாத்தாவின் பெயரை காப்பாற்ற வேண்டிய கடமை சஞ்சய்க்கு அதிகமாகவே இருக்கிறது. லைக்கா விஜயின் மகனை தங்களுடைய தயாரிப்பில் அறிமுகப்படுத்த வேண்டும் என சரியாக லாக் பண்ணி வைத்து இருக்கிறது.
ஜேசன் சஞ்சய் லாக் பண்ணிய ஹீரோ
இந்த படம் சஞ்சய்க்கு கனவு படம் என்றும் இதில் கண்டிப்பாக வாரிசு ஹீரோதான் அறிமுகமாக போகிறார் என செய்திகள் வெளியானது. சங்கர் மகன், கவின், துல்கர் சல்மான் போன்றவர்கள் நடிக்க இருப்பதாக அடுத்தடுத்து செய்திகள் வெளியானது.
ஆனால் தற்போது ஜேசன் சஞ்சய் யாரை தேர்வு செய்திருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் அவருடைய தம்பியாக நடித்த சந்தீப் கிஷன் தான் ஹீரோவாக தேர்வாகி இருக்கிறார்.
இவர் தெலுங்கு சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர். விஜய் மகன் சினிமாவுக்கு வருவது எல்லோருக்கும் சந்தோஷம் தான் என்றாலும் தமிழ் ஹீரோவை தேர்ந்தெடுக்காதது ஒரு பக்கம் வருத்தமாக தான் இருக்கிறது.
தளபதியின் மகன் இயக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் ஆசையாகவே இருந்தது. தற்போது இது கொஞ்சம் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.
- விஜய் மகனுக்கு இந்த நிலைமையா?
- லைக்காவில் தவம் கிடக்கும் ஜேசன் சஞ்சய்
- தளபதி வாரிசுக்கு கிடைக்கும் மொத்த பணம்