வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

முதலமைச்சருடன் சேர்ந்து விஜய் கட்டும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்.. இதுதான் மக்கள் சேவையா..!

Actor Vijay to build multiplex theater in Puducherry: தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கும் விஜய், தற்போது அரசியலில் குதித்து அமர்க்களப்படுத்தி வருகிறார். யாவரும் கணிக்க முடியாத வகையில் பல திருப்பங்களை திடீர், திடீரென அமல்படுத்தும் தளபதி, 2026  தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியே தீருவேன் என்ற உறுதியுடன் இருக்கிறார். 

முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகம் என தனது கட்சியை அறிவித்து, கட்சி செயலியை அறிமுகப்படுத்தி, இரண்டு கோடி வரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளார். 

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,அரசியலுக்கு வரும்போது இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் எவ்வாறு பயந்தனவோ அதேபோன்ற ஒரு ஹைப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு பீதீயை கிளப்பி உள்ளார். 

அரசியல் சதுரங்கத்தில் கவனமுடன் காய் நகர்த்தும் தளபதி, ஒரு பக்கம் தனது பொருளாதார நிலைப்பாட்டையும்  உயர்த்தும் நோக்கில் பல திட்டங்களை சத்தம் இல்லாமல் தீட்டி வருகிறார்

பாண்டிச்சேரியில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்ட உள்ள தளபதி

பாண்டிச்சேரியில பீச் ஓரமா அதீத தொழில்நுட்பத்துடன் கூடிய தரமான மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்ட ப்ளான் போட்டுவிட்டார் நம்ம தளபதி. இதற்காக புதுச்சேரி முதல்வரையும் சந்தித்து ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. அதுமட்டுமின்றி இதற்காக பாண்டிச்சேரி கவர்ன்மென்ட்டு இன்னும் 99 வருஷத்துக்கு பக்கவாக காண்ட்ராக்ட் போட்டு கொடுத்துள்ளனராம்.  தனது இந்த நடவடிக்கைகள் மூலமாக தன்னை வலிமையாக்கி கொள்கிறார் இந்த  தளபதி. 

2026 தேர்தலுக்கு முன்னாடியே ஓபன் பண்ண வேண்டும் என்ற குறிக்கோளுடன் விறுவிறுவென என வேலைகளை துவங்கி உள்ளார்.  இதற்காக முதல்வர் ரங்கசாமியை அடிக்கடி ரகசியமாக சந்தித்து உள்ளாராம் விஜய். இதை அறியாத மக்களும், தளபதியின் ரசிகர்களும்,  மக்கள் சேவைக்காகவே முதல்வரை சந்திக்கிறார் என்று தப்பு கணக்கு போட்டனர். 

இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமில்லை! தளபதி முதலில் தன்னை பலப்படுத்திக் கொண்டு, பின்பு மக்கள் சேவையை பலப்படுத்த உள்ளார் என்பததே இதன் பொருள். 

அதுமட்டுமின்றி மல்டிபிளக்ஸ் தியேட்டர் யாருக்காக கட்டுகிறார் மக்களுக்காக தானே. கலை சேவை, மக்கள் சேவையோடு கல்லா கட்டவும் வாய்ப்பாக அமைந்துள்ளது இந்த தியேட்டர். தளபதியின் சேவை புதுச்சேரிக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் அதிகமாக தேவை!

Trending News