திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் எந்த இயக்குனரிடமும் காட்டாத நெருக்கம்.. அட்லீக்காக எப்பவும் கதவை திறந்து வைத்திருக்கும் தளபதி

இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். தன்னுடைய முதல் படமான ராஜா ராணியிலேயே தனக்கான ஒரு அடையாளத்தை கோலிவுட்டில் உருவாக்கி கொண்டார். இவருக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற ரேஞ்சில் தான் இருந்தது.

முதல் படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றியினால் இரண்டாவது படமே தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு வந்தது. விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் தெறி என்னும் படத்தை இயக்கினார். மற்ற இயக்குனர்களை விடவும் அட்லீ விஜய்யை ரொம்ப அழகாகவும், ஸ்டைலிஷாகவும் காட்டுவார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களை பார்த்தாலே அது தெரியும்.

Also Read: ஷங்கர் போல் சம்பளம் வாங்கினால் மட்டும் போதாது கண்ணியமும் வேண்டும்.. அட்லியின் சிறுபிள்ளை ஆட்டிட்யூட்

விஜய்க்கு எப்பேர்ப்பட்ட வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களிடமும் அவர் அடுத்தடுத்து பணி புரியவில்லை. ஆனால் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து அடுத்தடுத்து பணி புரிந்தார். இவர்களுடைய கூட்டணியில் மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வரிசையில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றன.

இயக்குனர் அட்லீயின் மீது எப்போதுமே நெட்டிசன்களால் ஒரு பெரிய விமர்சனம் வைக்கப்படும். அது என்னவென்றால் அட்லீ திரைக்கதைகளை காப்பி அடிக்கிறார் என்பது தான். இந்த விமர்சனம் விஜய் நடித்த தெறி , மெர்சல், பிகில் திரைப்படங்களுக்கும் வைக்கப்பட்டது. ஆனால் விஜய் இதுபோன்ற கருத்துக்களுக்கு எப்போதும் காது கொடுத்ததில்லை.

Also Read: 8 வருட கனவு, உச்சகட்ட சந்தோஷத்தில் பிரியா அட்லி.. ட்விட்டரில் வைரலாகும் கற்பகால புகைப்படங்கள்

இயக்குனர்-நடிகர் என்பதை தாண்டி இருவருக்குள்ளும் அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது. உண்மையை சொல்ல போனால் அட்லீக்கு கோலிவுட்டில் ஒரு பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்ததே நடிகர் விஜய் தான். அட்லீயுடன் படம் பண்ண விஜய் தயக்கம் காட்டுவதே இல்லை என்பதை பல இடங்களில் நிரூபித்து இருக்கிறார்.

தளபதி 67க்கு பிறகு விஜய் இயக்குனர் அட்லீயுடன் படம் பண்ணப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அட்லீயின் பிறந்தநாள் பரிசாக நடிகர் விஜய்யே அட்லீயிடம் இதை தெரிவித்திருக்கிறார். மேலும் சமீபத்தில் பிரியா அட்லீயின் வளைகாப்புக்கு சென்ற நடிகர் விஜய் மீண்டும் தன்னுடைய அடுத்த படம் அட்லீயுடன் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Also Read: காதலுக்கு கண்ணில்லை என்பதை நிருபித்த 5 நட்சத்திர தம்பதியினர்.. அழகை பார்க்காமல் கரம் பிடித்த அட்லி-பிரியா

Trending News