வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜயகாந்த் நம்பி வளர்த்தவைகள் & வளர்த்தவர்கள்.. இதனால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் இருந்த கேப்டன்..!

Actor Vijayakanth helps Artists and people: சினிமாவில் வளர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ள ஆசைப்படுகின்றனர். திரையில் பெருந்தன்மையுடன் இருப்பவர்கள் நிஜ வாழ்வில் குறுகிய மனப்பான்மையுடன் இருப்பது இயல்புதான். இந்த பிற்போக்குத்தனத்தை களைந்து தன்னுடன் இருப்பவர்களை உயர வைத்த சாகச மனிதனின் சரித்திரத்தில் சில,

விஜய்: இன்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவர்களின் ஆரம்பகால படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையாது போகவே செந்தூரப் பாண்டியில் விஜயகாந்த்தை  கௌரவத் தோற்றத்தில் களம் இறக்கி விஜய்யை வெற்றி பெற செய்தார் தந்தை எஸ்ஏசி. நட்பின் ஆழத்தை நிரூபிக்கும் பொருட்டு எஸ்ஏசி யிடம் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்தார் என்பது கூடுதல் தகவல்.

Also read: மனதிற்கு பிடித்தவர்கள் 5 பேரை பலி கொடுத்த 2023.. சாதாரண மக்களையும் விட்டு வைக்காத தரித்திரம் பிடித்த வருஷம்

சூர்யா: ஆரம்ப காலத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் சூர்யா நடித்து அவருக்கு  ஸ்கோப் இல்லாமல் போகவே பெரியஅண்ணாவில் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னைவிட கதையில் சூர்யாவுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் அவருக்காக நடித்து அவரை உயர்த்தி விட்டவர் விஜயகாந்த்.

வடிவேலு: நம்ம ஊரு காரன் என்று அரவணைத்து வாய்ப்பளித்து வடிவேலுவை தமிழ் சினிமாவில் பரிச்சியப்பட உதவியவர் விஜயகாந்த். அரசியல் மற்றும் தனி மனித காழ்ப்புணர்ச்சியால் ஏற்றி விட்ட வரை ஏறி மிதித்த பெருமை வடிவேலுவையே சாரும். போற்றியோரை அரவணைத்து தூற்றியோரை தூசி தட்டியவர் விஜயகாந்த்.

தமிழ் சினிமா கலைஞர்கள்: தமிழ் சினிமாவில் கலைஞர்கள் நலிவுற்றபோது கடவுளை நினைப்பார்களோ இல்லையோ தவறாது கேப்டனை நினைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு உதவி கேட்டு வந்தவரை வெறுங்கையோடு அனுப்பும் பழக்கம் இந்த கலைஞனுக்கு இருந்ததில்லை. கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்முன் கலைஞனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை அரவணைத்தவர் விஜயகாந்த.

ஏழைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரும் அரசியலை கனவாகக் கொண்டு வரவா? வேண்டாமா? என்று யோசிக்க, தைரியத்துடன் தனது ரசிகர் மன்ற கொடியை கட்சி கொடியாக அங்கீகரித்து இரு ஜாம்பவான்களை பதற  வைத்து ஏழைகளின் முன்னேற்றத்திற்காகவே அரசியலுக்கு வந்தார். இவர் அரசியலுக்கு வந்த புதிதில் கூறிய திட்டங்கள் இன்று மறைமுகமாக மற்றவர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Also read: சிவாஜி, மற்ற நடிகர்களுக்காக ஓடி ஓடி உழைத்த கேப்டன்.. மட்டமாக நடந்து கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கம்

Trending News