Actor vijayakanth original name and Actor Kullamani helped vijayakanth for movie chance: “மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன்! அவர்கள் நல்லது செய்தால் நான் என் கட்சியை கலைப்பேன்! என்று ஆளும் கட்சியை கூறும் துணிவு விஜயகாந்தை தவிர வேற எந்த அரசியல்வாதிக்கும் இருந்தது இல்லை. சும்மாவே நல்லது செய்வார் தனக்கு நல்லது செய்தவருக்கு எந்த அளவுக்கு உதவி செய்து தன் நன்றி கடனை தீர்த்தார் என்பதை காணலாம்.
மதுரையில் இருந்து படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தையின் ரைஸ் மில்லை கவனித்ததோடு 80 களில் வெளியாகி கொண்டிருந்த படங்களை தியேட்டரில் வினியோகம் செய்து கொண்டிருந்த நண்பருக்கு உதவியாக இருந்து வந்தார் விஜயராஜ். ஆம் நிஜத்தில் விஜயராஜாக இருந்து சினிமாவிற்காக அறியப்பட்டவர் தான் விஜயகாந்த்.
சினிமாவின் மீது ஏற்பட்ட காதலால் தன் நண்பர்களுடன் அளவலாவும் போது நீயும் நடிக்கலாம் என்று ஆசை காட்ட சென்னைக்கு வந்து தங்கினார் விஜயகாந்த். தன்னை விதவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டு அதை வைத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார் விஜயகாந்த். அப்போது சிறு வேடங்கள் ஆனாலும் பிசியாக இருந்த நடிகர் குள்ளமணியின் நட்பு விஜயகாந்த் கிடைத்தது. விஜயகாந்திற்கு தெரியாது இந்தக் குள்ள மனிதர் தான் தன்னை உயரத்தில் வைக்கப் போகிறார் என்று..!
Also read: தாய் முதல் தாரம் வரை.. ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் வாழ்வில் நிகழ்ந்த கோஇன்சிடன்ஸ்
சில நேரங்களில் சில மனிதர்கள் விதியின் பயனால் இயல்பாக முன்வந்து உதவுவது போல் குள்ளமணி தான் நடித்த படங்களின் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்கள் இடமும் விஜயகாந்தின் புகைப்படத்தை காட்டி என்ன வேடம் கொடுத்தாலும் நடிப்பார் என்று இவரை நடிப்பதற்கு பரிந்துரை செய்வாராம்.
அப்படிதான் விஜயராஜ் தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ஆக தன் பயணத்தை தொடங்கினார். “என் கேள்விக்கென்ன பதில்” என்ற ரஜினியின் படத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்தாலும் ரஜினி மறுக்கவே இந்த படத்திற்கான அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயகாந்த்.
தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை என படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறினாலும் தான் நடிக்கும் அத்தனை படங்களிலும் குள்ள மணி இருக்கிறாரா என்பதை இயக்குனரிடம் கன்ஃபார்ம் செய்து விடுவாராம் விஜயகாந்த். பெரிய மருது, உழவன் மகன், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோவில் கிழக்காலே என பல படங்களில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தார் குள்ளமணி. “என் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Also read: விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி