சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

வளர்த்து விட்டவர்களை மதிக்காத விஜய்.. தலையாட்டி பொம்மையாக ஆட்டிப்படைக்கும் முதலாளி!

நடிகர் விஜய்யின் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படம் முழுக்க முழுக்க தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பளார் தயாரித்த திரைப்படம். படத்தின் முக்கியமான இடங்களின் திரையரங்கு உரிமையையும் மட்டும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. இதற்கு காரணம் அவர் அந்த மேடையில் பேசும் அரசியல். அதை வைத்தே அடுத்த சில நாட்களை ஓட்டி விடுவார்கள். அந்த வகையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அதிகளவு இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read: விஜய்யை நாலாபக்கமும் சுத்தி அடிக்கும் பிரச்சனை.. வாரிசு ஆடியோ லான்ச் நடக்குமா?

அந்த வகையில் தற்போது, வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பல முக்கியமான நபர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த முறை இந்த விழாவிற்கு பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை.

அதற்கு காரணம் இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை சன் டிவி தொலைக்காட்சி ஒளிபரப்ப இருக்கிறதாம். எனவே இது சம்மந்தப்பட்ட வீடியோக்கள் ஏதும் வெளியில் கசிந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள். இதனால் வேறு எந்த பத்திரிகைகளுக்கும் அழைப்பு கொடுக்கவில்லையாம். இதனால் பத்திரிக்கை துறையை சார்ந்தவர்கள் நடிகர் விஜய் மீது மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

Also Read: வாரிசு மேடையில் விஜய் விலாசப் போகும் 5 சம்பவங்கள்.. குட்டி ஸ்டோரி யாருக்குத் தெரியுமா?

விஜய்யின் வாரிசு திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்த போதெல்லாம் விஜய்க்கு ஆதரவாக கூட இருந்தவர்கள் பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள் தான். மேலும் இந்த படத்திற்கு எல்லா வகையிலும் விளம்பரம் செய்திருக்கின்றனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை புறக்கணிப்பது ரொம்பவே தவறான விஷயம் .

இதனால் வருத்தத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நடிகர் தக்க பதில் கொடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். எப்படியும் ரசிகர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுக்க தான் போகிறார்கள். அப்படியிருக்க பத்திரிகையாளர்களை புறக்கணிப்பது கண்டனத்திற்கு உரியது. மேலும் இந்த இந்த விழாவில் பங்கேற்க ரசிகர்களுக்கும் டிக்கெட் அதிகமாக வைத்திருக்கிறார்களாம்.

Also Read: ஒன்றிய அரசை பதம் பார்க்கப் போகும் விஜய்.. தலைமை தாங்கும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மூத்த தலைவர்

Trending News