திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வசூல்ராஜாவை வச்சு செய்த ரிலீஸ்.. என்னடா இது தளபதி விஜய்க்கு வந்த சோதனை

தளபதி விஜய் இன்றைய பாக்ஸ் ஆபீசின் கிங்மேக்கர் ஆக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களாக அவருடைய படங்கள் அத்தனையுமே நூறு கோடி வசூலை தாண்டியதுதான். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட்டுக்கு நிகராக தற்போது நடிகர் விஜய்யின் மார்க்கெட் இருக்கிறது என்பது நூறு சதவீதம் உண்மையான ஒன்று. விஜய்யை நம்பி தயாரிப்பாளர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வரிசையில் காத்திருக்கின்றனர்.

இப்படி கோலிவுட் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் விஜய்யுடன் இணைந்து பணிபுரிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசை கட்டிக் கொண்டு நின்றிருக்க அவரோ மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார். தன்னுடைய 66 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குனர் வம்சிக்கு கொடுத்தார்.

Also Read: கமல், சூர்யா லியோ படத்தில் நடிப்பார்களா?. விஜய் போட்ட கண்டிஷனால் குழம்பி போன லோகேஷ்

இந்தப் படம் தொடங்கியதில் இருந்தே விஜய்க்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனைதான். படப்பிடிப்புக் காட்சிகள் லீக் செய்யப்பட்டது, ஆந்திராவில் மகர சங்கராந்தி அன்று படம் ரிலீஸ் ஆகக் கூடாது என்ற பிரச்சினை பண்ணியது, வாரிசுக்கு தமிழகத்திலேயே திரையரங்குகள் கிடைக்காமல் போனது என்று அடிமேல் அடி வாங்கினார் தளபதி விஜய். இதுவும் போதாது என்று ரிலீசுக்கு பிறகும் படம் அதிகமான நெகட்டிவ் விமர்சனங்களேயே சந்தித்தது.

தியேட்டர் ரிலீஸிலேயே பல அடிகளை வாங்கிய வாரிசு திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இது நடிகர் விஜய்க்கு மேலும் மிகப்பெரிய சங்கடத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை ஓடிடி தளத்தில் யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. தியேட்டரில் எப்படியாவது விஜய்யை ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்று போராடிய விஜய் ரசிகர்கள் கூட வாரிசு ஓடிடி ரிலீஸை கண்டு கொள்ளவில்லை.

Also Read:விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தூக்கி எறிய சாய்பல்லவி கூறிய காரணம்.. வாய்ப்பில்ல என்றாலும் வாய்க்கொழுப்பு அதிகம்

தியேட்டர் காட்சிகள், கலெக்சன் என்று முட்டுக் கொடுத்தவர்களால் கூட தற்போது ஓடிடி ரிலீஸ் பற்றி வாயை திறக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வாரிசு திரைப்படம் ஓடிடி தள ரிலீசில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. தியேட்டரில் எப்படி நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததோ அதைவிட மிகப்பெரிய அடியாகத்தான் அமைந்திருக்கிறது ஓடிடி ரிலீஸ்.

கோலிவுட் சினிமாவின் வசூல் மன்னனாக தனிக்காட்டு ராஜா போல் சில வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்த தளபதி விஜய்க்கு வாரிசு திரைப்படம் ஒரு மிகப்பெரிய அடி தான். தற்போது விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் லியோ திரைப்படத்தில் பணிபுரிந்து வருகிறார்.வாரிசு திரைப்படத்தினால் பெற்ற மிகப் பெரிய அடியை லியோ திரைப்படத்தின் மூலம் வென்று காட்டுவாரா என்பது இனி தான் தெரியும்.

Also Read: விஜய்யுடன் நடித்து பாலிவுட்டில் புகழ்பெற்ற 5 ஹீரோயின்கள்.. தளபதிக்கு இப்படி ஒரு ராசியா

Trending News