திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கையும் களவுமாக மாட்டிக் கொண்ட தளபதி விஜய்.. சிவகார்த்திகேயன் பாடலை காப்பி அடித்து சிக்கிய ‘ரஞ்சிதமே’

தளபதி விஜய் ‘மாஸ்டர்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வாரிசு படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோவாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த பாடலை நடிகர் விஜய் மானசியுடன் இணைந்து பாடியிருக்கிறார். கவிஞர் விவேக் பாடல் வரிகள் எழுத தமன் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடல் தற்போது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

இப்போது இந்த ‘ரஞ்சிதமே’ பாடல் வேறொரு பாடலின் காப்பி என நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். எப்போதுமே இது போன்ற காப்பி கேட் தகராறில் அனிருத் தான் மாட்டுவார், இப்போது அதில் சிக்கியிருப்பவர் இசையமைப்பாளர் தமன். ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் இந்த பாடலை கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தமன், 2004 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவருடன் நடித்த பரத், சித்தார்த், நகுல் ஆகியோர் நடிப்பை தொடர இவர் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். தெலுங்கு இண்டஸ்ட்ரியில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறார். ‘காஞ்சனா’, ‘ஒஸ்தி’ போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

Also Read: அஜித்தால் அந்த ஒரு விசியத்தில் விஜய்யை நெருங்க கூட முடியாது.. சர்ச்சையை ஏற்படுத்திய சினிமா பிரபலம்

இந்த ‘ரஞ்சிதமே’ பாடல், தெலுங்கு படமான கிராக்கில் வரும் ‘மாஸ் பிரியாணி’ என்னும் பாடலின் மெட்டில் அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கண்டுபிடித்து பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். என்னதான் கிராக் திரைப்படம் தமன் இசையில் வந்திருந்தாலும், தளபதி படத்துக்கு புதுசாக மெட்டமைக்காமல் இப்படியா பண்ணுவது என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுவும் போதாதென்று, ரஞ்சிதமே பாடலில் விஜய் ஆடும் நிறைய நடன ஸ்டெப்புகள், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’ பாடலில் சிவகார்த்திகேயன் போட்டு விட்டதாகவும், அதை அப்படியே விஜய் காப்பி அடித்து ஆடுகிறார் என்று கூறி , இரண்டு பாடல்களின் வீடியோ காட்சிகளையும் கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Also Read: முதல் முறையாக ரஜினியின் கோட்டையில் நுழையும் விஜய்.. போஸ்டரை மாஸாக ரிலீஸ் செய்த லோகேஷ்

Trending News