ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

என்னப்பா சொல்றீங்க! விக்ரம் கூட சசிகுமார் நடித்திருக்காரா!. சித்தப்பா தயவில் சியானுக்கு அடித்த ஜாக்பாட்

Actor Vikram and Sasikumar starrer film: கோலிவுட்டில் நல்ல நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் சசிகுமார், நடிகராகவும் அவதாரமெடுத்தார். இவர் தயாரிப்பாளராகவும் மாறி தரமான படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இப்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி, சியான் விக்ரம் உடன் சசிகுமார் இணைந்து நடித்திருக்கிறாராம். அதுவும் விக்ரமின் சினிமா கேரியரை புரட்டிப்போட்ட சேது படத்தில் தான், அவருடன் சசிகுமார் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் முதல் பாதியில் ஹேண்ட்ஸம் ஹீரோவாகவும், இரண்டாம் பாதியில் மனநோயால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்து தன்னுடைய அல்டிமேட் நடிப்பை வெளி காட்டினார்.

இந்த படத்தில் இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக சசிகுமார் பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமல்ல சேது படத்தில் ‘கான கருங்குயிலே’ என்ற குத்தாட்ட பாடலுக்கு விக்ரமுடன் சசிகுமார் இணைந்து டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த விஷயம் இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் வெளிவந்திருக்கிறது.

Also Read: விக்ரம் கேரியரை தூக்கி நிறுத்திய சூப்பர் ஹிட் படம்.. 21 ஆண்டுகளுக்கு முன் சிங்கம் போல வந்த சியான்

விக்ரமும் சசிக்குமாரும் இணைந்து நடித்த படம்

அதோடு ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த படத்தை தயாரித்ததே சசிக்குமாரின் சித்தப்பா தானாம். அவர் மதுரையில் பெரிய பெரிய பிசினஸ் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம், சொந்தமாகவே இவருக்கென்றே மதுரையில் தியேட்டர் இருக்கிறது.

அவர் தயாரிப்பில் தான் விக்ரமின் சினிமா கேரியரையே புரட்டி போட்ட சேது படமே உருவாகி இருப்பது, சசிக்குமாரையும் பெருமையடையச் செய்துள்ளது. அதோடு சேது படம் விக்ரமுக்கு அடிச்ச ஜாக்பாட் என்றே சொல்லலாம். அந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் டாப் கீரில் எகிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: காணமல் போன 2 இளம் சாக்லேட் பாய்ஸ்.. போராடிக் கொண்டிருக்கும் சசிகுமாரின் உடன்பிறப்பு

Trending News