செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பொன்னியின் செல்வனுக்கு பின் விக்ரம் பிரபுவிற்கு வரிசை கட்டி காத்திருக்கும் 3 படங்கள்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட ரெய்டு

தமிழ் சினிமாவிற்கு சிவாஜியின் பேரனாகவும் பிரபுவின் மகனாகவும் அறிமுகமானாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் நடிகர் விக்ரம் பிரபு. இவருக்கு  படங்களுக்கு சமீப காலமாகவே போதிய வரவேற்பு கிடைக்காமல் இருக்கிறது.

இருப்பினும் முயற்சியை கைவிடாத விக்ரம் பிரபு கிடைக்கும் பட வாய்ப்புகளில் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அப்படிதான் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கந்தன் மாறனாக  நடிப்பில் பிச்சு உதறி இருக்கிறார். இந்த படத்தில் நடித்த பிறகு விக்ரம் பிரபுவின் ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது.

Also Read: காடுகளை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 6 படங்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய கோவை சரளா

தற்போது விக்ரம் பிரபு கைவசம் மூன்று படங்கள் உள்ளது. அதிலும் வெள்ளக்கார துரை படத்திற்கு பிறகு இவருடைய எவர்கிரீன் கதாநாயகியான ஸ்ரீ திவ்யாவுடன் ஜோடி போடும் ரெய்டு திரைப்படம் பக்கா ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் வெறித்தனமான ட்ரைலர் வெளியாகி  ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இனிவரும் நாட்களில் துவங்கப்பட்ட ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியிட உள்ளனர்.  அடுத்ததாக யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு- ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடிக்கும் இறுகப்பற்று. இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகி விரைவில் படப்பிடிப்பையும் துவங்க உள்ளனர்.

Also Read: ஆம்பளனா ரத்தம் இருக்கணும், அதுவும் சுத்தமா இருக்கணும்.. வெறியோடு கிளம்பிய விக்ரம் பிரபுவின் ரெய்டு டீசர்

அடுத்ததாக கார்த்திக் மூவி ஹவுஸ் பேனரின் கீழ் கார்த்திக் அத்வைத் எழுதி இயக்கிவரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

விரைவில் படப்பிடிப்பை துவங்குவதற்காக தயாராக உள்ளனர். இவ்வாறு இந்த மூன்று படங்கள் தான் விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களாகும். ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தன்னை நிரூபித்த  விக்ரம் பிரபுவுக்கு இந்த மூன்று படங்களும் வெற்றி படங்களாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: குணச்சித்திரம் காமெடி என இரண்டிலும் மின்னிய தம்பி ராமையாவின் 6 படங்கள்.. 50 வயதிலும் சாதித்த நடிகர்

Trending News