திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

துருவ் விக்ரம் பண்ணும் சேட்டை.. அப்பா பெயரை காப்பாற்ற வேண்டாம், கெடுக்காம இருந்தா போதும்

நடிகர் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்போது இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வனில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

நடிகர் விக்ரமின் மிகப்பெரிய கனவாக இருப்பது அவருடைய மகன் துருவ் விக்ரமை மிகப் பெரிய ஹீரோவாக்குவது தான். விக்ரம் தன்னுடைய ஆரம்ப கால சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் நிறைய சிரமபட்டு இருக்கிறார். இயக்குனர் பாலாவின் சேது படம் தான் விக்ரமை தூக்கி விட்டது. தான் பட்ட கஷ்டம் ஏதும் தன்னுடைய மகனுக்கு வராமல் அவருக்கான சினிமா பாதையை உருவாக்கி கொடுத்து இருக்கிறார்.

Also Read: வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய தயாரிப்பாளர்.. பயங்கர கோபத்தில் சீயான் விக்ரம்

தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் மறுஉருவாக்கம் செய்து அதில் துருவ் விக்ரமை நடிக்க வைத்தார் விக்ரம். இந்த படத்தை முதலில் பாலாவை இயக்க வைத்தார் விக்ரம். அந்த படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் படத்தில் திருப்தி இல்லாமல் படத்தின் கதையே மாற்றி மீண்டும் முதலில் இருந்து வேறு இயக்குனரை வைத்து கதாநாயகியை மாற்றி படத்தை ரிலீஸ் செய்தனர்.

இந்த படத்தில் முழு ப்ரமோஷன் வேலைகளையும் விக்ரமே எடுத்து செய்தார். துருவ் விக்ரமை ஹீரோவாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் துருவோ அப்பாவின் முயற்சிக்கு ஈடு கொடுக்காமல் ஜாலியாக சுற்றி வருகிறார். ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு பிறகு அவரே சொந்த முயற்சியில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.

Also Read: கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்காதவரா? மணிரத்தினத்தின் படம் பார்ப்பதற்கு முன் இத தெரிஞ்சுட்டு போங்க

துருவ் அவர் இஷ்டத்திற்கு மியூசிக் ஆல்பம் பண்ணுகிறேன் என்று சுற்றி வருகிறார். மியூசிக் ஆல்பம் என்று ஒவ்வொரு காலேஜாக அதுவும் பெண்கள் காலேஜ்களில் சுற்றி வருகிறார். விக்ரம் அவருடைய கேரியருக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு ஜெயித்த நிலையில், அவருடைய மகன் இப்படி அப்பாவின் பேரை கெடுக்கும் படி செய்வதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதெயெல்லாம் கவனித்து கொண்டிருந்த விக்ரம் மகனை தெலுங்கு இண்டஸ்ட்ரியில் வளர்த்து விட தீவிரமாக இறங்கி இருக்கிறாராம். தொடர்ந்து கதைகளை கேட்டு வருகிறார். கதையை தேர்ந்தெடுக்கும் முன்னே கதாநாயகியை லாக் செய்து விட்டார். நடிகை ரோஜாவின் மகளை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read: விக்ரம் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த விவேக்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

Trending News