திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வரிசை கட்டி நிற்கும் விக்ரமின் 4 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக வரும் தங்கலான்

தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற நடிகராக திகழும் விக்ரம், 90களில் இருந்து தற்போது வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகராகவே இருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் பல்வேறு பிரச்சினைகளால் பலமுறை படப்பிடிப்பு தடுக்கப்பட்டு, தற்போது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். இதில் விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகம், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார். முழு படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்ததால், விரைவில் ரிலீஸ் தேதியையும் வெளியாக உள்ளது.

Also Read: ராஜமவுலியை ஒரே சீனில் மிரட்டி விட்ட லோகேஷ்.. கமல் முன்னாடி நடந்த சுவாரசியமான சம்பவம்

தங்கலான்: பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டிருக்கும் தங்கலான் படம் கோலார் தங்க வயலில் மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கர்நாடகாவில் நடந்து வந்தது. அதை அடுத்த தற்போது மீண்டும் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆதிவாசி போல் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக உள்ளது.

பொன்னியின் செல்வன்: கல்கி எழுதி நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி உலக அளவில் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். எனவே அவருடைய கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் வலுவாக இருப்பதால் விரைவில் ரிலீஸ் ஆக எடுக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

விக்ரம்-லோகேஷின் எல்சியு(LCU): விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கம் லியோ படத்தில் சியான் விக்ரமுக்கு ஆக ஒரு கதாபாத்திரத்தை லோகேஷ் ரெடி பண்ணி இருந்தார். ஆனால் அது சிறிய கதாபாத்திரம் என்பதால் விக்ரம் அதில் நடிக்க விரும்பவில்லை. இருப்பினும் லோகேஷின் எல்சியு பட வரிசையில் சியான் விக்ரமுக்கு ஒரு கதையை தயார் செய்து வைத்து இருக்கிறார். அது விக்ரமுக்கும் பிடித்துப் போனதால் விரைவில் லோகேஷின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ளார்.

Also Read: லியோ 100% என் படம்னு சொன்னதெல்லாம் பொய்யா.. செய்வதறியாமல் புலம்பும் லோகேஷ்

எப்போதுமே தன்னுடைய படங்களில் இருக்கும் முக்கிய கதாபாத்திரங்களை அந்த படத்தோட விட்டுவிடாமல் அடுத்த படத்திலும் தொடரும் லோகேஷின் எல்சியு படங்களில் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படமும் இடம் பெறப்போகிறது. இந்தப் படமும் விக்ரம், லியோவை விட தாறுமாறாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

இவ்வாறு இந்த 4 படங்கள் தான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கிறது. அதிலும் தங்கலான் படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்தால் அந்தப் படம் தான் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக இருக்கு போகிறது.

Also Read: 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபலம்.. லோகேஷ் வாய்ப்பு கொடுத்தும் செகண்ட் இன்னிங்ஸ் தவறவிட்ட நடிகர்

Trending News