ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தலை முடி கூட நடிக்குதே.! விக்ரமுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியான தங்கலான் வீடியோ

Thangalaan: விக்ரம் இன்று தன்னுடைய 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கலான் டீம் அவருக்கான ஒரு சர்ப்ரைஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அவர் படத்துக்காக எந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்பதை காட்டி இருக்கின்றனர்.

ஏற்கனவே விக்ரம் இதற்காக கடுமையாக உழைத்தது அனைவரும் அறிந்தது தான். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் அவர் ரியலாக அடிவாங்கி நடித்திருப்பது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

விக்ரமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான்

அதிலும் இரவு பகல் பாராமல் அவர் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். இந்த அளவுக்கு வெறியுடன் அவர் நடித்திருப்பதை பார்த்தாலே படம் நிச்சயம் இண்டஸ்ட்ரியல் ஹிட் என்பதில் மாற்றமில்லை.

அதேபோல் தலைமுடி, விரல் நகம் கூட நடிக்குதே என ஆச்சரியப்படும் அளவுக்கு விக்ரம் இருக்கிறார். ஆக மொத்தம் இந்த தங்கலான் அவருக்கான தேசிய விருதை வாரி கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Trending News