வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆழம் தெரியாமல் காலை விட்ட தயாரிப்பாளர்.. நாமம் போட்டு கழட்டி விட்ட விஷால்

நடிகர் விஷால் சினிமாவுக்குள் வந்த காலத்தில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் ஹீரோ. சண்டக்கோழி, திமிரு, சத்யம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் அடுத்தடுத்து தேவை இல்லாமல் சர்ச்சைகளில் சிக்கி மொத்தமாக தன் பெயரை டேமேஜ் ஆக்கிக் கொண்டார். இப்போது மொத்தமாக மார்க்கெட் இழந்து தவித்து கொண்டிருக்கிறார்.

நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடக்கிறது என்று பகிரங்கமாக பேசிய விஷால், பாண்டவர் அணி என்று நடிகர்கள் நாசர், கார்த்தி மேலும் அவருடைய நண்பர்கள் ரமணா ,நந்தா போன்றவர்களை வைத்து நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவியை எதிர்த்து நின்றார். அந்த தேர்தலில் இவருடைய அணி வெற்றியும் கண்டது.

Also Read: கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை அவர் தான் காப்பாற்ற வந்திருப்பது போலவும், நடிகர் சங்கத்துக்காக புதிதாக கட்டிடம் கட்டியே தீருவேன் என்றும் அந்தக் கட்டிடத்தில் தான் தனக்கு திருமணம் நடைபெறும் என்றும் ஓவராக பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் இவருக்கு தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஒரு துணை நடிகை உடன் நிச்சயதார்த்தம் வேறு நடைபெற்றது. ஆனால் அந்த திருமணமும் எந்த காரணமும் சொல்லாமல் நிறுத்தப்பட்டது. தற்போது விஷால் நடிகர் சங்கத்தை பற்றியும் பேசுவதில்லை, நடிகர் சங்க கட்டிடத்தை பற்றியும் வாயைத் திறக்காமல் இருக்கிறார்.

Also Read: லியோ படத்தில் விஷால் இல்லாதது நல்லது தான்.. தயாரிப்பாளர் கூறிய பதிலை கேட்டு ஷாக்கான லோகேஷ்.!

நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்தபோது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் விஷாலும், கார்த்தியும் இணைந்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்று ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தனர் . இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துக் கொண்டிருந்தார். ஆனால் நடிகர் விஷால் வழக்கம்போல் தன் வேலையை ஐசரி கணேஷ் இடமும் காட்டிவிட்டார்.

இந்த படத்தின் பாதி வேலைகள் முடிந்த நிலையில், படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி கம்பி நீட்டி விட்டார் நடிகர் விஷால். இதனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பெரிய அளவில் நஷ்டம் அடைந்தார். அதற்கு காரணமான விஷால் மீது இன்று வரை கோபத்துடன் சுற்றி வருகிறார்.

Also Read: இஷ்டத்துக்கு உளறும் விஷால்.. பேராசையால் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி

Trending News