Actor Vishaal: நடிகர் விஷாலை பார்க்கும்பொழுது ‘ ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்’ என்று வடிவேலு சொல்லும் காமெடி வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுனனுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அவரைப் போலவே உடல்வாகு கொண்ட ஹீரோ வந்துவிட்டார் என விஷால் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் விஷால் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வெற்றி படங்களையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் ரிலீஸ் ஆன மார்க் ஆண்டனி படம் எஸ் ஜே சூர்யா நடிப்பால்தான் வெற்றி பெற்றது என்று சொன்னால் விஷால் கூட அதை மறுக்க மாட்டார். சரி தோல்வி படங்கள் கொடுப்பதனால் அவரை எப்படி ட்ரோல் மெட்டீரியல் ஆக்கலாம் என்ற கேள்வி ஒரு சிலருக்கு இருக்கலாம்.
நெட்டிசன்கள் நடிகர் விஷால் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கும் அவருடைய செயல்தான் முக்கிய காரணம். திடீரென அரசியலுக்கு வரப்போகிறேன் என சொன்னது, நடிகர் சங்க தேர்தலின் போது என்ன அடிக்கிறாங்க என அலறிக்கொண்டு ஓடி வந்தது, சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் இரங்கல் செய்தி தெரிவிக்கிறேன் என ஒப்பாரி வைத்தது என அவரை கலாய்ப்பதற்கு, அவரே கண்டன்டு கொடுத்து விடுகிறார்.
இப்போதைக்கு ஒரு பெரிய வெற்றி படம் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விஷால் இயக்குனர் ஹரியுடன் ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் தாமிரபரணி படம் பெரிய வெற்றி பெற்றது. விரைவில் ரிலீசாக இருக்கும் ரத்னம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.
அந்த விழாவில் கல்லூரி மாணவர்கள் சிலர் விஷாலிடம் கேள்வி கேட்டார்கள். சமீபத்தில் விஷால் எங்கு போய் சாப்பிட்டாலும் மூன்று கடவுள்களையும் கும்பிட்டு விட்டு சாப்பிடுவது போல் ஒரு வீடியோ வைரலாகியது. அதற்கு யோகி பாபு கொடுத்த ரியாக்ஷன் அதைவிட பயங்கரமாக ட்ரெண்டானது. இதைப் பற்றி கல்லூரி மாணவர்கள் விஷாலிடம் இந்த வீடியோவுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.
அதற்கு பதில் அளித்த விஷால் எல்லா சாமியும் எனக்கு ஒன்னு தான், என் கழுத்துல மூணு சாமியோட கயிறு இருக்கு. இப்போ விளம்பரத்திற்காக நான் அப்படி பண்ணவில்லை, கடந்த பத்து வருடங்களாக நான் சாப்பிடும் போது இப்படித்தான் சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடுகிறேன். இதற்கு நான் யாரிடமும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என சொல்லிவிட்டார்.