திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடி மேல, அடி மேல அடி வாங்கும் விஷால்.. அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்

நடிகர் விஷால் எனிமி, லத்தி திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜி வி பிரகாஷின் த்ரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு நடித்த அன்பானவன் அசாராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

மார்க் ஆண்டனி திரைப்படம் நடிகர் விஷாலுக்கு 33ஆவது திரைப்படமாகும். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நடிகை ரித்து வர்மா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

Also Read: சின்ன விஷயத்திற்காக ரொமான்ஸ் சீனை தூக்க சொன்ன அஜித்.. எஸ்ஜே சூர்யா சொன்ன ரகசியம்

மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முறையாக நடிகர்கள் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் இவர்கள் இருவருக்குமே இரட்டை வேடங்கள் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்களுக்கு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அங்கு தான் நேற்று நடிகர் விஷாலுக்கு ஒரு மிகப்பெரிய சோக சம்பவம் நடந்து இருக்கிறது. நேற்று படப்பிடிப்பில் ஒரு லாரி காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செட்டுக்குள் வந்திருக்கிறது.

Also Read: இந்த 6 இயக்குனர்கள் படம்னாலே ‘ஏ’ சர்டிபிகேட் கன்ஃபார்ம்.. கதையை விட அந்த மாதிரி காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

அந்த சமயத்தில் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்து இருக்கிறார்கள். லாரி வருவதை பார்த்து எல்லோரும் இருபுறமும் சிதறி ஓடி இருக்கிறார்கள். அந்த சம்பவ இடத்தில நடிகர்கள் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் இருந்திருக்கின்றனர். இருவருமே மயிரிழையில் உயிர் தப்பியதாக தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது. நடிகர் விஷாலை பொறுத்த வரைக்கும் அவருடைய ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதே மிகப்பெரிய போராட்டமாக தான் இருக்கிறது. இந்த நிலையில் இப்படி அடுத்தடுத்து அவருக்கு அடிமேல் அடி தான் விழுந்து கொண்டிருக்கிறது.

Also Read: வாலி படத்தில் சிம்ரன் கேரக்டரில் நடிக்க இருந்த நடிகை.. இவங்க தளபதியோட செம ஜோடி ஆச்சே!

Trending News