ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தொடர் பிளாப், கடன் சுமை.. வாய்ப்பு கேட்டு தளபதியிடம் சரண்டரான நடிகர்

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார்.

வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள். எப்போதுமே லோகேஷின் படத்தில் வில்லன் கேரக்டர்கள் வெயிட்டாக இருக்கும். அந்த வரிசையில் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்ட தளபதி 67ல் விஜய்க்கு மொத்தம் 7 வில்லன்கள் நடிக்க இருக்கிறார்கள்.

Also Read: என்னது விஷால் விஷயத்துல அப்படி ஒரு சம்பவமே நடக்கலையா? பகீர் கிளப்பி, அந்தர் பல்டி அடித்த நடிகை

ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் த்ரிஷா ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம்மேனன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது நடிகர் விஷாலும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்சேதுபதி, சூர்யாவை தொடர்ந்து லோகேஷின் வில்லனாகிறார் புரட்சி தளபதி.

விஷாலுக்கு பெரிய அளவில் எந்த படங்களும் அமையவில்லை. சொந்த படம் எடுத்தும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. மற்ற படங்களில் நடித்தும் வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு நல்ல பட வாய்ப்புக்காக விஷால் கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கடன் பிரச்சனை மட்டுமில்லாமல் இவர் மீது பல புகார்களும் இருக்கின்றன.

Also Read: கதை விஷயத்தில் இயக்குனரை படாதபாடு படுத்தும் 5 நடிகர்கள்.. விஷால் செய்யும் பெரிய அக்கப்போர்

இதற்கிடையில் தான் இப்போது தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இவரை அணுகி இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு விஷால் கூடிய விரைவில் ஒப்புதல் அளிப்பார் என்று நம்பப்படுகிறது. காரணம் விஷாலுக்கு நிறைய கடன் இருப்பதால் இந்தப் படத்தில் நடிப்பதற்கு அவர் கேட்கும் தொகை கண்டிப்பாக கிடைக்கும் ஆகையால் நடிப்பார்.

இந்த படத்தின் மூலம் விஷாலுக்கு வேறு விதமான இமேஜ் கிடைக்கும். இதனால் விஷாலின் சினிமா வாழ்க்கை மீண்டும் பிரகாசமாகும். விஜய் 67 படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் இப்பொழுது விஷால் பேசப்பட்டு வருகிறார். விஷால் இல்லையென்றால் அடுத்ததாக அரவிந்த்சாமி, அவரும் இல்லை என்றால் அடுத்ததாக எஸ் ஜே சூர்யா என்று ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். முடிந்த வரை விஷால் இதில் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

Also Read: பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

 

Trending News