புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சொந்த வீடு இல்லை அதற்கு செலவழித்து விட்டேன்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகன் ஆவார். இவரின் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 என்ற படத்தை விஷால் இயக்கி, தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் வித்தியாசமான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே விஷால் துப்பறிவாளன் படத்தின் முதல் பாகத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் திடீர் மரணம் அடைந்தார். அவர் நிதியுதவி செய்ததன் மூலம் 1800 மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது அவர் இறந்து விட்டதால் அந்த மாணவர்களின் நிலை என்ன என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

புனித் ராஜ்குமாரின் நண்பரான விஷால் அவருடைய இரங்கல் நிகழ்வுக்கு சென்றிருந்தார். அப்போது பேசிய விஷால் இந்த மாணவர்களின் கல்விக்கான நிதி உதவியை தானே வழங்குவதாக தெரிவித்தார். இது பலருடைய பாராட்டையும் பெற்றது.

விஷால் தான் சொந்தமாக வீடு வாங்குவதற்கு வைத்திருந்த பணத்தை அந்த மாணவர்களுக்கு கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தனக்கு என்று சொந்த வீடு எதுவும் இல்லை அம்மா, அப்பாவுடன் தான் வசித்து வருகிறேன் என்றும் தெரிவித்தார். இப்பொழுது மாணவர்களின் கல்வி தான் முக்கியம் வீடு அடுத்த வருடம் கூட வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளர்.

விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். மேலும் விஷாலுக்கு சொந்தமாக ஒரு ஆபீஸ் உண்டு. இது தவிர அவர் தயாரிக்கும் தற்போதைய படத்தை கொடைக்கானலில் செலவு செய்து எடுத்து வருகிறார். மேலும் நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.

இவ்வளவு இருந்தும் விஷால் தனக்கு சொந்த வீடு கூட இல்லை என்று கூறியிருப்பது நம்பும்படியாக இல்லை என்று பலரும் கூறுகின்றனர்.

Trending News