திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அந்த நாள் தான் வரலட்சுமியை நினைத்து முதன் முறையாக கண் கலங்கினேன்.. மனம் திறந்த விஷால்!

Vishal: கோலிவுட்டில் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட ஜோடிகளில் ஒன்று விஷால் வரலட்சுமி. வரலட்சுமிக்கு கடந்த வருடம் அவருடைய நீண்ட நாள் நண்பரான நிக்கோலாய் உடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் மத கத ராஜா படத்தின் வெற்றி விழாவில் விஷால் வரலட்சுமி பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

விஷால் மற்றும் வரலட்சுமி காதலில் இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில வருடங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

பின்னர் நடிகர் சங்க தேர்தல் பிரச்சனையில் சரத்குமார் மற்றும் விஷாலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வரலட்சுமி உடனான காதலும் முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது.

வரலட்சுமியை நினைத்து முதன் முறையாக கண் கலங்கினேன்

வரலட்சுமி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் போது விஷால் ஆந்திராவைச் சேர்ந்த துணை நடிகை ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மதகத ராஜா படத்தின் வெற்றி விழாவில் இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி.

இப்போது பார்த்தாலும் ஃப்ரிட்ஜில் வைத்தது போல் பிரஷ்ஷாக இருக்கிறார். இருவரும் ஒரே படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் கல்லூரியில் இருந்தே படித்தது போல் ரொம்பவும் நெருக்கமாக பேசக் கூடியவர்.

எனக்கு பொதுவாக அழும் பழக்கம் கிடையாது. ஆனால் வரலட்சுமி தெலுங்கில் நடித்த அனுமன் படத்தின் ஒரு காட்சியை பார்த்துவிட்டு நான் ரொம்பவே அழுதேன்.

அந்த காட்சிக்கு திரையரங்கிலும் நல்ல வரவேற்பு இருந்தது என பகிர்ந்திருக்கிறார்.

Trending News