ஹிந்தி திரை உலகை ஆட்டிப் படைக்கும் முன்னணி கான் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். அவர் ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் போன்ற நடிகைகளை காதலித்தார். ஆனால் இந்த காதல் கைகூடாமல் தற்போது சல்மான்கான் 55 வயதை கடந்தும் சிங்கிளாக இருக்கிறார்.
இந்தி திரையுலகில் சல்மான்கான் எப்படியோ அப்படித்தான் நம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால். இவருக்கு காதல் கை கூடிய அளவிற்கு திருமணம் கைகூடவில்லை. அவர் தன்னுடன் நடித்த நடிகை லட்சுமி மேனனை முதலில் காதலித்தார்.
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இவர்களது காதல் பிரிவில் முடிந்தது. அதன் பிறகு விஷால் தன் தோழியான வரலட்சுமியை காதலித்தார். ஆனால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட விஷால் முன்னாள் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரை எதிர்த்து கடுமையாக சாடினார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தன் தந்தைக்காக விஷாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு தன் காதலை முறித்துக் கொண்டார். அதன் பிறகு விஷால் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார் அப்போது விஷாலுடன் இணைந்து நடித்த ஹன்சிகாவை காதலித்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை.
பிறகு தெலுங்கு தொழில் அதிபரின் மகள் ஒருவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் வரை வந்தது. ஆனால் அப்போது விஷாலை பற்றி பல சர்ச்சையான கருத்துகள் வெளியானது. இதனால் அந்த திருமணமும் பாதியிலேயே நின்று போனது.
தான் காதலித்த நான்கு பெண்களும் தன்னை வெறுத்து காதலை முறித்துக் கொண்ட நிலையில் விஷால் தற்போது 45 வயதை கடந்த பின்பும் சிங்கிளாக ஜாலியாக இருக்கிறார்.
தற்போது நடிப்பு, டைரக்ஷன் என்று தீவிரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் விஷால் துப்பறிவாளன் 2 என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.