மறைந்த நடிகர் விவேக்(vivek) கைவசம் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவை அனைத்துமே தற்போது பாதியில் நிற்கின்றன. விவேக்கிற்கு மாற்றாக வேறொரு நடிகரை யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்கிறார்கள் படக்குழுவினர் வட்டாரங்கள்.
விவேக் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் விஜயகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசைப்பட்டாராம். ஆனால் அந்த ஆசை தற்போது வரை நிராசையாகவே சென்றுவிட்டது. இருந்தாலும் விவேக்கிற்குள் இருந்த இயக்குனர் அவ்வப்போது எட்டி எட்டி பார்த்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் விவேக் ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அந்த படத்தை முதலில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள் தயாரிக்க முன்வந்தார்.
ஆனால் திடீரென அந்த படத்தை கைவிட்டதால் அடுத்ததாக அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இதே கதையை சொல்ல உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து அடுத்தடுத்த வேலைகளை ஆரம்பித்து விட்டார்களாம்.
மேலும் அந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க மாதவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் தான் எழுதிய கதையில் வில்லனாகவும் நடிக்க விவேக் ஆசைப்பட்டுள்ளார். மேலும் அந்த படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விறுவிறுப்பாக பட இயக்க தயாரான விவேக் திடீரென இறந்தது அனைவருக்குமே அதிர்ச்சி தான். விவேக்கின் நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது.