மக்களை சந்தோசமாக சிரிக்க வைத்த விவேக்கிற்கு அவரது வாழ்க்கையில் அவ்வளவு சந்தோசம் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விவேக் மகன் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் கவனம் செலுத்தி வந்த விவேக் சமீபத்தில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் கொரானா வரும் எனவும், ஆனால் அந்த கொரானா உயிரை கொள்ளாமல் இருக்க இந்த மருந்து உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் இந்த மாரடைப்பு வந்ததா? எனவும் சந்தேகம் ஏற்பட்டது.
ஆனால் இன்று அதிகாலை அவர் காலமானார் என மருத்துவமனையில் இருந்து செய்திகள் வந்தது. பெரும் அதிர்ச்சியாக உள்ளது. நடிகர் விவேக் அவர்களுக்கு சினிமாபேட்டை சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறோம்.