வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விவேக் அஜித்திற்கு வைத்த கடைசி வேண்டுகோள்.. நிறைவேற்றுவாரா தல!

காமெடிகளிலேயே கருத்துக்களை கலந்து மக்களை சிந்திக்க வைக்கும் சிறந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக். மறைந்த முன்னால் ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாம் ஐயாவின் விசுவாசி என்று கூட சொல்லலாம்.

தல அஜித் மற்றும் விவேக் கூட்டணியில் வெளிவந்த படங்களில் காமெடிகள் பெருமளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டவை. ஏன் சமீபத்தில் வந்த விஸ்வாசம் படத்தில் கூட இருவரும் காமெடியில் கலந்து கட்டி அடித்து இருப்பார்கள்.

தாராள பிரபு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவேக்கிடம் ரசிகர் ஒருவர் பெரிய பிரபலம் ஒருவருக்கு சவால்விட வேண்டுமேயானால் யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்டுள்ளார்? அவர் கூறியதாவது, தல அஜித் தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மரம் நட சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த சவால்.

இதனை அஜித் தன் வாயால் கூறவில்லை என்றாலும் வழக்கம்போல் அறிக்கை விடுவதை போல் வெளியிட்டாலே போதும். தல அஜீத்துக்காக தன் உயிரையே கொடுக்கும் ரசிகர்கள் மரம் நட மாட்டார்களா, பொறுத்திருந்து பாருங்கள் தல ரசிகர்களை ஆட்டத்தை என்று கூறினார்.

its-ajiths-idea-says-vivek
its-ajiths-idea-says-vivek

நடிகர் அஜித்திற்கு சின்ன கலைவாணர் விவேக் விட்ட வேண்டுகோளை தல ஏற்று செய்தால் நாட்டுக்கும் நல்லது மேலும் இன்று மரணம் அடைந்த விவேக் வேண்டுகோளை நிறைவேற்றிய திருப்தி கிடைக்கும். பொறுத்திருந்து பார்போம்.

Trending News