புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

2வது பொண்டாட்டியும் டீலில் விட்டு ஏமாற்றும் சாமி நடிகர்.. ஆசையை அடக்க முடியல, நடிகையுடன் காட்டும் நெருக்கம்

சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிலர் தங்களது முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி சாமி பெயர் கொண்ட நடிகர் முதலில் சினிமாவில் பிரபலமாக உள்ள ஒருவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு குழந்தையும் பிறந்த நிலையில் சந்தோஷமாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் நடிகரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு உள்ளார் அவரது மனைவி. இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அந்த சமயத்தில் ஹீரோவின் மார்க்கெட்டும் சரிவை சந்தித்தது.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

இதைத்தொடர்ந்து வேறு ஒரு பெண்ணை சாமி நடிகர் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணும் சினிமாவில் செல்வாக்கு உள்ள பிரபலங்களிடம் நட்பாக இருக்கக்கூடியவர். தனது கணவர் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என பெரிய பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டு வாங்கி தந்துள்ளார்.

அதன்படி இப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றில் அந்த ஹீரோ நடித்து வருகிறார். மேலும் இரண்டாவது மனைவி வந்த நேரம் ஹீரோ நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி கொண்டிருக்கிறது. ஆனால் தன்னுடைய படத்தில் நடிக்கும் ஹீரோயினுடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம் நடிகர்.

ஆசையை அடக்க முடியாமல் இருக்கும் அந்த நடிகரின் சுய ரூபத்தை இரண்டாவது மனைவிக்கு படப்பிடிப்பில் உள்ளவர்கள் புட்டு புட்டு வைத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் முதல் மனைவியை போல் என்னையும் கழட்டி விடலாம் என்று நினைத்தாயா என லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார். இதனால் சாமி நடிகர் தற்போது அடக்கி வாசித்து வருகிறாராம்.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

Trending News