வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடுதலை பட பெருமாள் வாத்தியாராக நடிக்க இருந்த பிரபலம்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

Actor Vijay Sethupathi : வெற்றிமாறனின் விடுதலை 2 எப்போது ரிலீஸாகும் என ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் காத்துக் கொண்டிருக்கிறது. காமெடி நடிகராக மட்டுமே இதுவரை ரசிகர்களை கவர்ந்து வந்த சூரியை வேறு பரிமாணத்தில் வெற்றிமாறன் காட்டி இருந்தார்.

விடுதலை படத்தில் சூரியின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதே அளவுக்கு பெருமாள் வாத்தியாராக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் பேசப்பட்டது. அப்போது விஜய் சேதுபதி நிறைய படங்களில் கமிட்டாகி இருந்தார்.

ஆரம்பத்தில் விஜய் சேதுபதியிடம் 10 நாள் மட்டுமே கால்ஷீட் கேட்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவரது கதாபாத்திரம் நீடிக்கப்பட்டது. அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதுவும் படத்தின் ரிலீஸ் தள்ளி போனதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

பெருமாள் வாத்தியாக நடிக்க இருந்த சீமான்

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு முன் அந்த கதாபாத்திரத்தில் பாரதிராஜாவை நடிக்க வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது அவருக்கு உடல்நிலை பிரச்சனை இருந்ததன் காரணமாக நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெற்றிமாறனின் சாய்ஸ் சீமான் தான்.

சமீபத்தில் வெற்றிமாறன் மற்றும் சீமான் ஒரே நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தனர். அப்போது பேசிய சீமான் விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியாக நடிக்க வெற்றிமாறன் என்னை அணுகினார். ஆனால் என்னால் தாடி வைக்க முடியாது என்று நான் மறுத்ததால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.

அதோடு இப்போது வரை வடசென்னை 2 படம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வெற்றிமாறன் அதை எடுப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் விடுதலை 2 எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார். ஏனென்றால் முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகம் வருவதாக அறிவித்துவிட்டார்.

ஆகையால் விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அற்புதமாக இருக்கும் என்றும் சீமான் அந்த மேடையில் கூறியிருந்தார். மேலும் விடுதலை 2 படம் முழுக்க பெருமாள் வாத்தியை மையமாக வைத்து தான் கதை நகர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News