புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறன் மீது பல வருடமாக கடுப்பில் இருக்கும் நடிகர்.. ஈகோவால் ஹிட் படத்தை இழந்த சோகம்

பிரபல நடிகர் நடித்த படம் ஒன்றில் அசோசியேட் இயக்குனராக வேலை பார்த்த வெற்றிமாறன் அந்த படத்தின் இயக்குனரிடம் இல்லாதது பொல்லாதது கூறி அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக பல வருடமாக வெற்றி மாறன் மீது கோபத்தில் இருக்கிறாராம் முன்னணி நடிகர் ஒருவர்.

இன்றைய காலகட்டங்களில் வெற்றிமாறனுக்கு தமிழ் சினிமாவில் செம டிமாண்ட் உள்ளது. அனைத்து முன்னணி நடிகர்களும் வெற்றிமாறனுடன் ஒரு படம் செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் தனுஷின் வளர்ச்சிதான்.

என்னதான் செல்வராகவன் தனுஷுக்கு நடிப்பு ரீதியாக நல்ல நல்ல படங்களை கொடுத்திருந்தாலும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் மிகப்பெரிய உச்சத்தை தொட காரணமாக இருந்தவர் வெற்றிமாறன் என்பது மிகையாகாது.

இதனால் வெற்றிமாறன் படத்தில் நடிக்க பலரும் ஆர்வம் காட்டி கொண்டிருக்கின்றனர். வெற்றிமாறனின் முதல் படமாக அமைந்தது பொல்லாதவன். இந்த படத்தின் கதையை முதன் முதலில் வேறு ஒரு நடிகரிடம் தான் சொன்னாராம் வெற்றிமாறன்.

ஆனால் அந்த நடிகர் ஏற்கனவே வெற்றிமாறன் அசோசியேட் இயக்குனராக வேலை செய்த பிரபல இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது வெற்றிமாறன் இந்த நடிகரை பற்றி அவரது இயக்குனரிடம் போட்டு கொடுத்ததாக பல வருடமாக காண்டில் உள்ளாராம். அந்த ஈகோ காரணமாகவே பொல்லாதவன் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அதன் பிறகு அந்த படம் தனுஷுக்கு அமைந்து தனுஷின் சினிமா கேரியரில் முக்கிய படமாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பொல்லாதவன் படத்தில் அந்த நடிகர் நடித்திருந்தால் இன்று தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்க மாட்டார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

vetrimaaran-cinemapettai
vetrimaaran-cinemapettai

Trending News