தமிழ் சினிமா மற்றும் சீரியலில் பிரபல நடிகராக வலம் வருபவரின் மனைவி விரைவில் சன் டிவியில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியல் மூலம் களம் இறங்க உள்ளாராம்.
சீரியல்களின் சங்கமும் என்றால் அது சன் டிவிதான். வாரத்தில் 6 நாட்கள் சீரியல்களைப் போட்டு ஆண்களின் வெறுப்பை சம்பாதித்தவர்கள். ஆனால் அதே சமயம் பெண்களின் ஆதரவு எப்போதுமே சன் டிவிக்கு தான்.
பொழுது போவதற்காக சன் டிவியில் சீரியல் பார்க்க தொடங்கிய பெண்கள் இப்போதெல்லாம் பொழுது போனாலும் எழுந்து போவதில்லை. அந்த அளவுக்கு சீரியல்களில் மோகம் நாளுக்கு நாள் பெண்களுக்கு அதிகமாகி வருகிறது.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற அனைத்து சேனல்களும் தற்போது வாரத்தில் ஆறு நாட்கள் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள் அனைவரும் இறுதி காலகட்டங்களில் சீரியல்களில் நடித்து சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆறு வருடங்களுக்கு முன்பு வரை சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் பிரபல நடிகர் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி. கடந்த 6 வருட காலமாக இல்லற வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இவர்கள் தளபதி விஜய்யின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் சன் டிவி சீரியலில் களமிறங்க உள்ளாராம். இதனை சன் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்ததுதான் தாங்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.