தமிழ் சினிமால நகைச்சுவை நடிகரா மட்டுமில்லாமல் ஹீரோ supporting role னு பல கதாபாத்திரங்கள ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தான் நடிகர் யோகிபாபு. இவருடைய ஆரம்பக்காலகட்ட சினிமா வாழ்கைல பல சிறிய பட்ஜெட் படங்கள நடிச்சிட்டு வந்தாரு. .
யோகிபாபுக்கு கிடைத்த மிகப் பெரிய பட வாய்ப்ப பார்க்கப்பட்டதுதான் lady superstar நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம். இந்த படத்தில் யோகி பாபு நயன்தாரவை காதலிக்கும் காதல் மன்னனா நடிச்சி அசத்தி இருப்பார்.
இந்த படத்தில் வெளிவந்த எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துருச்சு பாடல் இனையத்தில் டிரென்டிஙல வந்து ஹிட் அடித்த பாடலாக அமைந்தது. இந்த படத்தில் நடித்த பிறகு முன்னனி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களோடு பல திரைப்படங்களில் நடிச்சி தன்னோட மார்கெட் level ஆ அதிகப்படுத்தி இருக்கார்.
தற்போது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோன திரைப்படத்தில் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். இப்போது தன்னுடைய சினிமா வாழ்க்கையின் வளர்ச்சியை பற்றி ஒரு interview வில் யோகி பாபு பேட்டி அளித்தார். அதில் தான் 7 முறை 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவன்.
ஆனால் சினிமா வாழ்க்கையில் வெற்றி பெற்று வருவதாக கூறி உள்ளார். தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்பதை நடிகர் யோகி பாபு தனது திறமையால் நிரூபித்து வருகிறார்.