புதன்கிழமை, ஜனவரி 15, 2025

யோகி பாபுவுக்காக வரிசை கட்டி காத்திருக்கும் 5 படங்கள்.. தூங்க கூட நேரமில்லாமல் சுத்தம் மண்டேலா

Actor Yogibabu Upcoming Movies: நகைச்சுவை நடிகர் யோகி பாபு, இப்போ எங்கேயோ போய்விட்டார். இவருக்காக டாப் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் இப்போது வரிசை கட்டி காத்திருக்கிறது. முதலில் காமெடியனாகவும் அதன் பின் மண்டேலா, குரங்கு பொம்மை போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் யோகி பாபு, இப்போது 5 படங்களில் அடுத்தடுத்த நடித்து தூங்க கூட முடியாமல் செம பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இவர் சமீபத்தில் குடிக்கு அடிமையான இளைஞனின் கதையை சொன்ன ‘லோக்கல் சரக்கு’ என்ற படத்தில் தினேஷ் உடன் நடித்திருந்தார். இந்த படத்தில் யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்து காமெடியில்  கைதட்டு வாங்கினாலும், படம் என்னமோ மொக்க தான். அதேபோல கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி யோகி பாபு ஹீரோவாக நடித்த ‘தூக்குதுரை’ படமும் சுத்தமாவே எடுபடல. இந்த படம் முழுக்க தங்க கிரீடத்தை இளைஞரின் கதையை தான் ஜவ்வாய் இழுத்துக் கட்டினர்.

இந்த வருட தொடக்கத்திலேயே ரெண்டு படங்களின் மூலம் மொக்கை வாங்கினாலும் யோகி பாபுவின் கையில் இப்போது ஐந்து படங்கள் லட்டு மாதிரி இருக்குது. சுந்தர் சி-யின் 25வது படம் தான் அரண்மனை 4. இதில் தமன்னா, ராசி கண்ணா இவர்களுடன் யோகி பாபுவும் காமெடி கேரக்டரில் நடிக்கிறார்.

Also Read: வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

யோகி பாபுவின் கையில் இருக்கும் 5 படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’ படத்திலும் யோகி பாபு தான் காமெடியன். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்- கீர்த்தி செட்டி ஜோடி சேரும் புதுவிதமான காதல் திரைப்படம் ஆன LIC (Love Insurance Corporation) படத்திலும் யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

அதேபோல் 400 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை காட்டியுள்ள படம் தான் கங்குவா. இந்தப் படத்திலும் யோகி பாபு அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். இதை தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘தி கோட்’ படத்திலும் தளபதியுடன் யோகி பாபு நகைச்சுவை கேரக்டரில் நடிக்கிறார். இவ்வாறு தற்போது இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்களில் யோகி பாபு தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். இதனால் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வரிசை கட்டிக் கொண்டிருக்கிறது.

Also Read: ஷாருக்கான் வாலை விடாமல் பிடித்துக் கொள்ளும் நடிகர்.. மூன்று மடங்கு சம்பளத்துக்கு அட்லீயை வைத்து விட்ட தூது

Trending News