தமிழ்சினிமாவில் அன்றைய காலத்தில் நடிகருடன் ஜோடி போட்ட நடிகைகளின் மகள்கள் தற்போது உள்ள நடிகருடன் ஜோடி போட்ட படங்களை பற்றி பார்ப்போம்.
அப்பாக்கு ஜோடியாக நடித்த நடிகைகளின் மகள்கள் மகனுக்கு ஜோடியாக நடித்த படங்கள்
#1. முத்துராமன், தேவிகா
நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் முத்துராமன், தேவிகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் டைரக்ட் செய்திருந்தார். குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இணைந்து முத்துராமனின் மகன் கார்த்திக் தேவிகாவின் மகளுடன் நடித்தார்.
#2. கார்த்திக், கனகா
முத்துராமன் மகன் கார்த்திக், தேவிகாவின் மகள் கனகா பெரிய வீட்டு பண்ணைக்காரன், கட்டப்பஞ்சாயத்து, எதிர்காற்று போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள். பெரிய வீட்டு பண்ணைக்காரன் நன்றாக ஓடியது.
#3. கார்த்திக், ராதா
#4. கௌதம் கார்த்திக், துளசி
கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், ராதாவின் மகள் துளசி ஆகிய இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் கடல் படத்தில் இணைந்தனர். இந்த படம் படுதோல்வியடைந்தது.
#5. சிவகுமார், மேனகா
உறங்காத நினைவுகள் படத்தில் சிவகுமார் மேனகா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இந்தப் படம் சுமாரான வெற்றியை பெற்றது. அடுத்து சேர்க்குமாறு மகன் சூர்யாவைப் பற்றி பார்க்கலாம்.
#6. சூர்யா, கீர்த்தி சுரேஷ்
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிவகுமாரின் மகன் சூர்யா மற்றும் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடித்து இருப்பார்கள். இந்த படம் வெற்றி பெற்றது.
#7. சிவாஜி, தேவிகா
ஆண்டவன் கட்டளை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் தேவிகா நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது பிரபு நடித்த தேவிகா மகளுடன் நடித்த படத்தை பற்றி பார்க்கலாம்.
#8. பிரபு, கனகா
ஜல்லிக்கட்டு காளை, பெரிய குடும்பம், போன்ற படங்களில் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும் தேவிகாவின் மகள் கனகா நடித்திருந்தனர். இரண்டு படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றது.
#9. சிவாஜி, லக்ஷ்மி
சிவாஜி கணேசன் மற்றும் லட்சுமி இருவரும் நெஞ்சமே என்ற திரைப்படத்தில் இணைந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது சிவாஜி கணேசனின் மகன் பிரபு, லட்சுமி மகளுடன் நடித்த படத்தை பார்க்கலாம்.
#10. பிரபு, ஐஸ்வர்யா
பின்பு சுயம்வரம் படத்தில் சிவாஜிகணேசன் மகன் பிரபு மற்றும் லட்சுமி மகள் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து நடித்தனர் இந்த படம் உலக சாதனைக்காக 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டது.
( சத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள் )