சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சீமானின் பகலவன் படத்தில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. அதற்கு காரணம் இதுதான்!

தற்போது நாம் தமிழர் கட்சி என்ற தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலில் அதிரடி காட்டிக்கொண்டிருக்கும் சீமான் ஒருகாலத்தில் இயக்குனராக அதிரடியான புரட்சியான கதைகளில் படங்கள் இயக்கி வந்தார்.

ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு தான் ஒரு சினிமாக்காரன் என்பதையே மறந்து விட்டார். அந்த அளவுக்கு அரசியல் ஈடுபாடுகளில் அதிகளவு தன்னை அர்ப்பணித்து வருகிறார். அதன் பலன்தான் தற்போது தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சியாக உயர்ந்துள்ளது நாம் தமிழர் கட்சி.

அரசியல் ஒருபுறமிருக்க சினிமாவிலும் சமீபகாலமாக சீமானுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். இதனால் தன்னுடைய பழைய கதைகளை தூசி தட்டி கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

ஒரு காலத்தில் சீமான் தளபதி விஜய்யை வைத்து பகலவன் என்ற படத்தை எடுக்க முயற்சி செய்தார் என்று கூட செய்திகள் வெளியானது. ஆனால் கடைசி வரை அது செய்தியாகவே சுவடு தெரியாமல் போய்விட்டது.

தற்போது மீண்டும் அந்த படத்தை எடுக்கலாம் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறாராம் சீமான். இதுகுறித்து பல நடிகர்களிடம் இந்த கதையை கூறி வந்தார். இவ்வளவு ஏன் சமீபத்தில் கூட சிம்புவை சந்தித்து அந்த கதையை கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் எல்லோருமே சீமானின் பகலவன் படத்தில் நடிக்க பயப்படுகிறார்களாம். அதற்குக் காரணம் கதையல்ல. அவரது அரசியல் தான். திடீரென அரசியலில் ஏதாவது ஒரு குளறுபடி ஏற்பட்டு படத்தை பாதியில் விட்டுவிட்டால் நம்முடைய நிலைமை அதோகதிதான் என அவரது படத்தில் நடிக்க தயங்குகிறார்களாம் நம்மூரு நடிகர்கள்.

Trending News