தமிழ் சினிமாவில் பல நடிகர்களும் படத்தில் நடித்தால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பேன் இல்லையென்றால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கங்கனம் கட்டி திரிவார்கள்.
ஆனால் விஜய் சேதுபதி அப்படியெல்லாம் இல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் ஏற்று அது வில்லனாக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நடித்து விடுவார்.
அப்படி ஹீரோ, குணச்சித்திர வேடங்கள் என இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை பார்த்த ஒரு சில நடிகர்கள் அதன்பிறகு தங்களது ரூட்டை மாற்றி கொண்டனர்.
சமீபத்தில் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்று சக்கை போடு போட்டது.
அதிலிருந்து பல ஹீரோக்களும் தற்போது வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றனர். பிரபுதேவா பஹீரா படத்தில் வில்லனாகவும், ஆர்யா எனிமி படத்தில் வில்லனாகவும் மற்றும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடித்துள்ளனர்.
இப்படி படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர்கள் தற்போது வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அளவிற்கு விஜய்சேதுபதியின் நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.