புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவாஜி குடும்பத்தில் இருந்து நடிக்க வந்தது மட்டும் இத்தனை பேரா? இன்றுவரை நிரப்பப்படாத அந்த இடம்

தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் சிவாஜி கணேசன் தன்னுடைய ஈடு இணை இல்லாத நடிப்பால் இன்றும் வளரும் நடிகர்களும் இவரது நடிப்பை தான் உதாரணமாக எடுத்துக்கொண்டு சினிமாவின் அடையாளமாக மாற முயற்சிக்கின்றனர். இவரைப்போலவே இவருடைய வாரிசுகளும் நடிப்பில் ஆர்வம் காட்டிக் வருகின்றனர்.

சிவாஜி: 1952 ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படத்திலே சிவாஜி கணேசன் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் திலகம், செவாலியே பட்டத்தை வென்ற பெருமைக்குரியவர். தமிழில் மட்டும் 275 திரைப்படங்களிலும், தெலுங்கில் 10 திரைப்படங்களிலும், ஹிந்தியில் 2 திரைப்படங்களிலும், ஒரு மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதைத்தவிர 17 திரைப்படங்களில் கௌரவ நடிகராகவும் தோன்றி தனது பிரம்மிப்பூட்டும் நடிப்பை வெளிக்காட்டியவர். இப்படி இன்றளவும் நடிப்பில் ஜாம்பவானாக திகழும் சிவாஜிகணேசன் அவர்களின் குடும்பத்தில் இருந்து அவருடைய மகன், பேரன் என வரிசையாக சினிமாவில் உதித்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபு: 80, 90-களில் சூப்பர் ஹீரோவாக கலக்கிய சிவாஜிகணேசனின் இளைய மகன்தான் பிரபு. இவரும் தந்தையைப் போன்றே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களிலும், குறிப்பாக சிவாஜியுடன் மட்டும் 19 படங்களிலும் நடித்து, 40 ஆண்டு காலமாக இன்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை விடாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ராம்குமார்: அறுபடை நாள், மைடியர் மார்த்தாண்டம் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அதன்பிறகு சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்தவர். இவர் சினிமாவில் மட்டும் அல்லாமல் தற்போது அரசியலிலும் ஆர்வம் காட்டுகிறார்.

விக்ரம் பிரபு: சிவாஜியின் இளைய மகனான பிரபுவின் மகன்தான் விக்ரம்பிரபு. இவர் சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் வரிசையாக நடித்து தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிவாஜி தேவ்: சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ், வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சிங்கக்குட்டி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகராக என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனங்களின் மூலம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு இவர் ஒரு சில தோல்விப் படங்களை வரிசையாக தந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சுஜாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு டாட்டா காட்டி விட்டார்.

துஷ்யந்த்: சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாரின் மகன் தான் துஷ்யந்த். இவர் தமிழ் சினிமாவின் மச்சி, சக்சஸ் ஆகிய திரைப்படங்களை நடித்து முன்பு நடிகராக இருந்தவர் தான். அதன்பிறகு சிவாஜி பிலிம்ஸ் நிறுவன பொறுப்பை ஏற்று செயல்படுகிறார்.

தர்சன்: அடுத்ததாக சிவாஜியின் வாரிசு நடிகரான தர்ஷன், ராம்குமாரின் இரண்டாவது மகன். இவர் புனேவில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் கூத்துப்பட்டறை நாடகங்கள் அரங்கேற்றி, தமிழ் சினிமாவில் நுழைய ஆர்வத்துடன் காத்திருக்கிறா.ர் இவர் தாத்தாவைப் போலவே தெருக்கூத்து நாடகங்களில் நடித்த ஒரு நடிகராக வரவேண்டும் என பல சினிமா கம்பெனிகளிடம் சரியான கதையை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இருக்கிறார்.

என்னதான் இது வரை மகன்கள் பேரன்கள் என ஆறு பேர் சினிமாவில் சிவாஜியின் வாரிசு நடிகர்களாக நுழைந்தாலும், அவரைப் போன்ற நடிப்பு யாரிடமும் பார்க்க முடியவில்லை. இன்றுவரை அவருடைய குடும்பத்தில் இருந்து வந்த யாராலயும் சிவாஜி இடத்தை இன்று வரை நிரப்ப முடியவில்லை.

Trending News