திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 7 ஹீரோக்கள்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களாக உள்ள பெரும்பாலான நடிகர்களில் முதல் படம் வெற்றி பெற்றதில்லை. அதன் பிறகு பல படங்களில் நடித்து ஒரு நிலையான பெயர் எடுத்த பிறகு அவரது படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது. ஆனால் சில நடிகர்களின் முதல் படமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

மோகன்: தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே பல படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மைக் மோகன். இவருடைய பல படங்கள் வெள்ளி விழா கண்டது. இவர் தமிழ் சினிமாவில் மூடுபனி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கதாநாயகனாக மோகன் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

கார்த்திக்: நவரச நாயகன் கார்த்திக் மற்றும் நடிகை ராதா இருவரும் இயக்குனர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கார்த்திக் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.1981 இல் ஆரம்பித்த கார்த்திக்கின் திரைப்பயணம் 40 வருடம் தாண்டியும் தொடர்கிறது.

அரவிந்த்சாமி: தமிழ் சினிமாவில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இவர் ரஜினியின் தளபதி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கதாநாயகனாக மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் மதுபாலாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. இப்படத்திற்கு மூன்று தேசிய விருது, இரண்டு பிலிம்பேர் விருது கிடைத்தது.

மாதவன்: துள்ளலான நடிப்பின் மூலம் பெண்களின் மனதை கவர்ந்த மேடி மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தில் ரகுமான் இசையில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பும் பெற்றது.

ஜெயம் ரவி: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் முதல் படம் ஜெயம். ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, சதா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்துள்ளார்.

சசிகுமார்: தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகர் ஆனவர் சசிகுமார். இவருடைய இயக்கத்தில் ஜெய், ஸ்வாதி நடிப்பில் வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக பரமன் கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

கார்த்தி: இவர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்திருந்தார். கிராமத்தின் சாயலை எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Trending News