சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர் மற்றும் நடிகைகள் அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு சிலர் வாழ்க்கையின் பிரச்சனை காரணமாக தவறான முடிவை எடுத்துள்ளனர். மற்ற சிலர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துள்ளனர்.
ஃபேடாஃபேட் ஜெயலட்சுமி. கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவளொரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஃபேடாஃபேட் ஜெயலட்சுமி. ஃபேடாஃபேட் என்பதற்கான அர்த்தம் சீக்கிரமாக வருவது. கிட்டத்தட்ட 66 படங்கள் நடித்துள்ளார்.
அவள் ஒரு தொடர்கதை, ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் முள்ளும் மலரும் போன்ற பல படங்களில் நடித்த இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திவ்யபாரதி. நிலா பெண்ணே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் திவ்யபாரதி. இவர் மன அழுத்தம் காரணமாக மும்பையில் ஒரு பால்கனியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆர்த்தி அகர்வால். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தவர் தான் ஆர்த்தி அகர்வால். பம்பரக் கண்ணாலே படத்தில் பூஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு மூச்சுத் திணறல் நெஞ்சு வலியின் காரணமாக காலமானார்.
யாஷோ சாகர். இவர் ஒரு பெங்களூர் நடிகர் உல்லாசமாய் உற்சாகமாய் என்ற படத்தில் நடிக்கும்போது விபத்தில் காலமானார்.
உதய்கிரன். உதய்கிரன் தெலுங்கு நடிகர் தொடர்ந்து மூன்று வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரீ ஹரி. ஸ்ரீஹரி வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு இன்ஸ்பிரேஷனாக நடித்திருப்பார். இவர் சூட்டிங் ஸ்பாட்டில் தலை சுற்றிக் கீழே விழுந்து காலமானார்.