வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

Actors Suriya and Karthi announcement: சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பலரது வாழ்க்கையும் ஜாமாக்கி உள்ளது. வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னை மழையில் மிதந்த வண்ணம் இருக்கிறது. மக்கள் பலரும் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி தத்தளித்து வருகின்றனர்.

நேற்று இரவு மழையின் தாக்கம் குறைந்த போதும் ஆங்காங்கே தண்ணீர் வடியாமல் இருப்பதாக செய்தி. மக்கள் பலரும் வீடுகளுக்குள் புகுந்த நீரால்  சாப்பாடு தண்ணீர் பால் என அத்தியாவசிய தேவைக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையை புரட்டி போட்ட இயற்கையின் இந்த கோரத்தாண்டவத்திற்கு மனிதம் ஒன்றே தீர்வாகும் என களத்தில் இறங்கி உள்ளனர் நல்ல உள்ளங்கள் பலரும்.

Also read: சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிய போகிறது.. அதிர்ச்சி தகவலை சொன்ன அஜித்தின் நண்பர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்காக நிவாரண தொகையாக 10 லட்சம் கொடுத்து பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். வெள்ளம் நல்ல பாதித்த பகுதிகளில் தங்களது ரசிகர் மன்றம் வாயிலாக வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு  இத்தொகையினை வழங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பணிகள் போய் சேருமாறு ரசிகர் மன்றங்களை முடுக்கி உள்ளனர். ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் முன் வந்து  மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது  என பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நல உதவிகளை செய்து வருகின்றனர்.

சூர்யா மற்றும் கார்த்தியின் இச்செயலால் திரை பிரபலங்கள் பலரும் வெள்ள நிவாரண பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:  2023ல் வெளியான தரமான 10 படங்கள்.. ரசிகர்களால் கொண்டாடப்படும் போர் தொழில், குட் நைட்

Trending News