திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆந்திராவின் மணிரத்தினத்துக்காக காத்துக் கிடக்கும் விஜய், சூர்யா.. போட்ட முதல்-ஐ காப்பாற்றி கொடுக்கும் இயக்குனர்

Actors Suriya and Vijay who wants to act in Telugu director Trivikram srinivas’s direction: நடிகர் விஜய், வெங்கட் பிரபுவுடன் G.O.A.T படத்தின் பிசியாக உள்ளார். சயின்ஸ் பிக்ஷன் மற்றும் ஆக்சன் டிராமாவாக தெறிக்கவிடும் G.O.A.T, விஜய்க்கு புதுமையான மற்றும் சிறப்பான படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதற்குப் பின் நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அதற்கு முன் ஒரு படத்தில் கடைசியாக நடித்து விடலாம் என்று அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்களுக்கு விஜய் 69 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

தமிழ் சினிமாவின் இன்றைய முன்னணி இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் வெற்றிமாறன் அவர்களிடம் விஜய் கதை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் நுழைவை உறுதிப்படுத்தி உள்ளதால் கடைசி படமான விஜய் 69, சாமானிய மக்களை குறிவைத்து பொலிடிகல் ஜனருடன் இருந்தால் நல்லது என யோசிக்கிறார் விஜய்.

Also read: உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

இதனால் தரமான கதையுடன், தேர்ந்த இயக்குனரை தேடி வருகிறார் விஜய், அப்படியே அவரது பார்வை தெலுங்கு திரை உலகின் பக்கம் திரும்ப, தெலுங்கு திரை உலகின் பல்வேறு விருதுகளை அள்ளி குவித்த மற்றும் அல்லு அர்ஜுனின் வைகுண்டபுரம், மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் போன்ற வெற்றி படங்களை தெறிக்க விட்ட முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிக்கலாமா என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

தமிழ் நடிகர்கள் எப்படியாவது மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கனவுடன் இருப்பது போல் தெலுங்கில் அனைத்து நடிகர்களுக்கும் பிடித்த மற்றும்  வசூல் ரீதியாக வெற்றியை கொடுக்கும் முன்னணி இயக்குனர் தான் திரிவிக்ரம்.

மகேஷ் பாபு அல்லு அர்ஜுனுக்கு இவர் தான் ரொம்ப ராசியான இயக்குனராம். இவர்களுக்கு ஹிட் வேண்டுமென்றால் இயக்குனர் திரிவிக்ரமிடம் தான் செல்வார்களாம். அந்த அளவிற்கு பக்காவாக பிளான் போட்டு திரைக்கதையை விறுவிறுப்புடன் நகர்த்தி  வெற்றியடைய செய்யும் தந்திரக்காரராம் இந்த திரிவிக்ரம்.

விஜய் மட்டுமின்றி, ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பே திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்து உள்ளார் சூர்யா. கங்குவா படத்தை அடுத்து சூர்யா அவர்கள் கர்ணா படத்தில் கமிட் ஆகி உள்ளார் அதற்குப்பின் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற கனவுடன் உள்ளாராம் சூர்யா.

Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?

Trending News