சூர்யாவின் கங்குவா படத்துடன் பிரபல நடிகரின் படமும் மோதவுள்ளது. சூர்யா முதன்முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபிதியோல், திஷா பதானி, ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சிவா, ஆதி நாராயண, மதன் கார்க்கி உள்ளிட்டோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 14 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. ஐமேக்ஸ் வடிவில் வெளியிடப்படவுள்ள இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது.
இப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் படத்திற்கு வழிவிட்டு வரும் நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா படம் ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்தது.இது தமிழ் சினிமாவில் உள்ள இரு முன்னணி நடிகர்கள் தங்கள் பட ரிலீஸை பரஸ்பர புரிதலுடன் ஏற்றுக் கொண்டது சினிமாத்துறையினரால் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில் வேட்டையன் படம் சோலோவாக ரிலீசாகிறது. ஆனால் அக்டோபரில் வேட்டையன் படத்திற்குப் பின் ‘ஓங்காரம்’ படம் அக்டோபர் 30 ஆம் தேதியும், அக்டோபர் 31 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரிலீஸாகவுள்ளது.இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் கங்குவா படத்துடன் வருண் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள மட்கா படம் வெளியாகவுள்ளது. இப்படம் மூலம் வருண் தேஜ் ‘பான் இந்தியா’ நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
கருணா குமார் இயக்கத்தில், மீனாட்சி சவுத்ரி, நோரா பதேஹி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, வைரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்.ஆர்.டி என்டர்டெயிட்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் வருண் தேஜ் இரண்டு ரோல்களில், 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
எனவே பெரும் எதிர்ப்பில் உருவாகியுள்ள மட்கா படத்தைக் காணவும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். எனவே வரும் நவம்பர் 14 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படத்துன் வருண் தேஜின் மட்கா படம் மோதவுள்ளதால் எந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் முந்தும், எந்தப் படம் ரசிகர்களின் அபிமானத்தைப் பெரும் என்று இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
பொதுவாகவே எந்த நடிகர்களின் படங்களின் படமாக் இருந்தாலும் சரி, பிரமாண்ட படமாக இருந்தாலும் சரி, கதை தான் சூப்பர் ஸ்டார். அது சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும் பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும் கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால் ரசிகர்கள் அதை கொண்டாட தவறுவதில்லை. அந்த வகையில், மட்கா மற்றும் கங்குவாவும் இரு வேறு கதைக் களங்களாக இருந்தாலும் அவை இரண்டுமே நன்றாக இருந்தால் அவற்றை சூப்பர் ஹிட்டாக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.