திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தென்னிந்திய டாப் 10 ஹீரோக்களின் மொத்த வசூல்.. புஷ்பாவிற்கு ஆப்பு வச்ச மாஸ்டர்

Actors who earned the highest box office collections in South Indian cinema after Corona: எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் வந்த கோவிட் 19 பலரதும் வாழ்க்கையை புரட்டி போட்டது. இதனால் படங்கள் தியேட்டரில் வெளிவர முடியாமல் ஓ டி டி யில் ரிலீசாகி வெற்றி பெற ஆரம்பித்தன. ஓ டி டி கலாச்சாரம் வந்த பிறகு மக்கள் திரையரங்குகளில் சென்று படம் பார்க்கும் ஆர்வத்தை குறைத்துக் கொண்டனர். இதனால் திரையரங்குகளில் வெளியாகி படத்தின் வசூலை எட்டுவது என்பது எட்டா கனியாகவே இருந்து வந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக  திரையரங்குகளில் வெளியான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பொறுத்து அதிக வசூலை ஈட்டிய நடிகர்களின் விவரங்களை காணலாம். 

கொரனாவிற்கு பின் வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களின் மூலம் தனது மாஸ் இமேஜை நிரூபித்த அஜித் 364 கோடியும் மற்றும் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இரண்டு படங்களை நடித்து 355 கோடி கலெக்ஷனையும் பெற்றுள்ளனர். புஷ்பா படத்தின் மூலம்  தேசிய விருது வென்ற அல்லு அர்ஜுன் 365 கோடி கலெக்ட் செய்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக பவன் கல்யாணின் மூன்று படங்கள் 415 கோடி ஈட்டி உள்ளது. அடுத்ததாக பாகுபலியின் மூலம் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதி புரூஷ், சலார் போன்ற படங்களில் நடித்து 1157 கோடி வசூலை தாண்டி இந்தியாவின் முன்னணி நடிகராக தரம் உயர்ந்தார். 

Also read: தறி கெட்டவர்களை தெறித்து ஓட செய்யும் அஜித்.. விடாமுயற்சியால் ஏற்பட போகும் மாற்றம்

மூன்றாவதாக கன்னட திரை உலகையே திருப்பி போட்ட நடிகர் யாஷின் கே ஜி எஃப் பாகம் ஒன்று மற்றும் இரண்டு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு உலக அளவில் 1230 கோடி வசூலையும் வாரி குவித்தது. 

இரண்டாவது இடத்தை ஆஸ்காரில் தெறிக்கவிட்ட ராஜமவுலியின் RRR திரைப்படம் 1275 கோடி கிராஸ் செய்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரணின் புகழை உலகமெங்கும் பரப்பியது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய். மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 1390 கோடி வசூலை பெற்று தென்னிந்தியாவிலேயே டாப் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் இளையதளபதி விஜய்

Also read: விஜய்க்கு முன்னரே மக்கள் பணி செய்த சாக்லேட் பாய்.. அரசியல் சாயம் பூசாத G.O.A.T பட நடிகர்!

Trending News