சில நடிகர் , நடிகைகள் தங்கள் ஒப்புக்கொள்ளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை கூட்டுவது, குறைப்பது என சில முயற்சிகள் எடுப்பார்கள். ஆனால் ஒரு சிலரோ தேவையில்லாமல் உடல் எடையை குறைக்கும் முயற்சியை எடுத்து தங்கள் மார்கெட்டை இழந்து விடுகிறார்கள். சிலர் வெற்றியும் பெறுகிறார்கள்.
சிம்பு: தன்னுடைய உடல் எடையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்றால் அது சிம்பு தான். கிட்டத்தட்ட தனது மொத்த எடையிலிருந்து 30 கிலோ வரை குறைத்தார். இது சிம்புவுக்கு பாஸிட்டிவாகவே அமைந்தது. அதன் பிறகு பல பட வாய்ப்புகள் அமைந்தன. ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியும் அடைந்தார். இவருடைய எடைக்குறைப்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகின.
Also read: சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து வரவிருக்கும் 3 படங்கள்.. காற்று வீசும் போதே கஜானாவை நிரப்பனும் தம்பி
கீர்த்தி சுரேஷ்: கீர்த்தி சுரேஷ் திடீரென தன் உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் என சொல்லலாம். இவர் உடல் எடை குறைத்த பிறகு அவருடைய வசீகர முகம் மாறிவிட்டது. அதற்கு பிறகு கீர்த்திக்கு எந்த தமிழ் பட வாய்ப்புகளும் அமையவில்லை. உண்மையை சொல்ல போனால் கீர்த்தி சுரேஷுக்கு பெரிய நாயகர்களுடன் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
ஹன்சிகா மோத்வானி: ஹன்சிகா அவருடைய தோற்றத்தினாலேயே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை தன்னுடைய முதல் படமான ‘எங்கேயும் காதல்’ படத்தில் பெற்றார். இளம் வயது குஷ்பூ போல் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் பெரிய ஹீரோக்களுடன் படமும் அமைந்தது. ஆனால் ஹன்சிகா எடுத்த திடீர் முடிவாக எடை குறைப்பு அவருடைய சினிமா கேரியரையே பூஜ்யமாகிவிட்டது.
சந்தானம்: காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக சந்தானம் மாறிய போதே அவருடைய சினிமா வாழ்க்கை சறுக்கி விட்டது. இதில் மாஸ் ஹீரோவாக முயற்சி செய்து சந்தானம் உடல் எடையை குறைத்து தன்னுடைய முக அழகையும் கெடுத்து கொண்டார்.
Also read: கழட்டிவிட்ட சந்தானம்.. கைப்பிடித்து தூக்கிவிடும் யோகி பாபு
விக்ரம்: தன்னுடைய உடல் எடையை நினைத்தவுடன் கூட்டுவது , குறைப்பது என ஒரே படத்தில் இவர் பல மாற்றங்களை கொண்டு வருவார். சேது, ஐ போன்ற திரைப்படங்கள் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. ஆனால் திடீரென உடல் எடையை கூடுவது, குறைப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. நடிகர் விக்ரம் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.