ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

40 வயதில் இரண்டாவது திருமணம் செய்த கௌதம் மேனன் படம் நடிகை.. முதல் புருஷன் சரியில்லையாம்!

தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மின்னலே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த நடிகை முதல் கணவருடன் விவாகரத்து பெற்றுக்கொண்டு தற்போது சத்தமில்லாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

மாதவன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்னலே. காதல் காவியமாக உருவாகியிருந்த இந்த படம் அன்றைய கால பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து மின்னலே படம் பல மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியிலும் மாதவன் நடிப்பில் கௌதம் மேனன் இந்த படத்தை இயக்கினார். அங்கேயும் செம ஹிட் அடித்தது. அந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் தியா மிர்ஸா.

கடந்த 2014ம் ஆண்டு சாஹில் சங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தியா. 5 வருடமாக திருமண வாழ்க்கை நல்லபடியாக சென்ற நிலையில் திடீரென கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

சமீபகாலமாக சாஹில் சங்கா என்பவரை நடவடிக்கைகள் மீது தியாவுக்கு சந்தேகம் வந்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாராம். இது சம்பந்தமாக அடிக்கடி இருவரும் கொள்ளும் பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார் தியா மிர்சா. 40 வயதான தியா மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் வைபவ் என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

diamirza-vaibhav-cinemapettai
diamirza-vaibhav-cinemapettai

Trending News